``ஒலிம்பிக்கில் விளையாடுவதே லட்சியம்..." - தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற தமி...
போக்ஸோவில் இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அடுத்த மரிமாணிகுப்பம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கரீம் (30). இவா் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி பெண்ணை கையைப் பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, செல்வியின் சகோதரா் சகாதேவன் அளித்த புகாரின் பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் கரீம் மீது வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.