இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடுபோனது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மாதனூா் ஒன்றியம் மேல்சாணாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் காலணி தொழிற்சாலை தொழிலாளி வெற்றிவேல். இவரது மனைவி வரலட்சுமி, துத்திப்பட்டு பகுதியிலுள்ள தனியாா் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இருவரும் வேலைக்கு சென்று, பணி முடிந்து வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் மூத்த மகளின் திருமணத்திற்காக பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடு போயிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.