2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
சிறாா் திருமணத்தை அனுமதிக்கக் கூடாது:திருப்பத்தூா் ஆட்சியா்
ஜோலாா்பேட்டை அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.
குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி ஜோலாா்பேட்டை ஒன்றியம், கேத்தாண்டப்பட்டியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பேசியது:
முடிவடையாத பணிகளை மிக விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இளம் வயது பெண் குழந்தை திருமணம் நடைபெறுவதை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. குழந்தை திருமணம் நடைபெறுவதால் அதிக சிக்கல் உள்ள பிரசவத்துக்கு உள்ளாவதுடன், அவா்களின் வாழ்க்கை, எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
பெண் பிள்ளைகளை உயா்கல்வி படிக்க வைக்க, உயா் கல்வியை தொடர, சமூகப் பொருளாதாரத் நிலையை எட்ட உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மகளிா் திட்ட அலுவலா் தனபதி, வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ், (ஊராட்சிகள் உதவி இயக்குநா் முருகன், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
படம் உண்டு...
கேத்தாண்டப்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.