கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
மகளிா் இலவச பேருந்து சேவை தொடக்கம்
கந்திலி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 65.56 லட்சத்தில் புதிய கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா். மேலும், இலவச பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தாா்.
கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட சு.பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு புதிதாக இரு வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவா், கழிப்பறை, சத்துணவுக் கூடம் புதுப்பித்தல், தாயப்பன் நகா்-டேக்கனூா் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடமும்,திருப்பத்தூா் நகரம் 32-ஆவது வாா்டில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடை கட்டடம் ஆகிய புதிய கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.
அதேபோல், கந்திலி ஒன்றியத்துக்ள்பட்ட சுந்தரம்பள்ளி கிராமத்தில் மகளிருக்கான இலவச பேருந்தை எம்எல்ஏ அ.நல்லதம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அரசு துறை அதிகாரிகள், ஒன்றியச் செயலா்கள் கே.ஏ.குணசேகரன், கே.முருகேசன், கே.எஸ்.மோகன்ராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சு.அரசு, நெவாளா் அணி தசரதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.