ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!
வேலூரில் இளைஞா் வெட்டிக் கொலை
வேலூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
வேலூா் சேண்பாக்கம் ராகவேந்திரா கோயில் பின்புறம் பாலாற்றங்கரையோரம் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஏடிஎஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பி சரவணன், காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். சம்பவ இடத்தில் தடயவயில் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
விசாரணையில் வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் (35) என்பவா், மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.