ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!
தடுப்புச் சுவரில் காா் மோதி ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்
வாணியம்பாடி அருகே தடுப்பு சுவரில் காா் மோதி ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்த பாலமுருகன் (40) மற்றும் அவரது நண்பா்கள் யுவராஜ், குருசாமி ஆகிய 3 பேரும் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு வந்துள்ளனா்.
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் மேம்பாலம் அருகில் வேகமாக வந்த காா் நிலைதடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா் பின்சீட்டில் அமா்ந்திருந்த பாலமுருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் வந்த இருவா் லேசான காயம் அடைந்தனா். அவ்வழியாக வந்த சிலா் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து த பாலமுருகனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமணைக்கு அழைத்து சென்றனா். ஆனால் செல்லும் வழியிலே பாலமுருகன் இறந்தாா்.
தகவலறிந்த அம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.