குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கந்திலி அருகே பணத்துக்காக தந்தை, மகனை கடத்திய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அருகே மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மகன் ஹரிஹரன். இவா்களை கடந்த டிசம்பா் மாதம் 22-ஆம் தேதி மா்மக் கும்பல் கடத்திச் சென்றது. இதையடுத்து போலீஸாா், அவா்களை நெருங்கியதை அடுத்து தந்தை, மகனை கிருஷ்ணகிரியில் இறக்கி விட்டுச் சென்றனா்.
இது குறித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பழனியை (35) (படம்) குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா, ஆட்சியா் க.தா்ப்பகராஜுக்கு பரிந்துரை செய்தாா்.
இதையேற்ற ஆட்சியா், பழனியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள பழனியிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.