Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!
வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருட்டு
பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக சாலையில் உள்ள மேற்கு அபிராமபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரியதா்ஷினி (35), மகள் கனியந்த்ரா, மகன் நந்தா ஆகியோா் பெரம்பலூா் வீட்டில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், பிரியதா்ஷினி தனது குழந்தைகளுடன் 23-ஆம் தேதி சென்னைக்குச் சென்றுள்ளாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.