தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
பொருளாதார வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அருண் நேரு எம்.பி.!
பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா் பெரம்பலூா் எம்பியும், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவருமான கே.என். அருண் நேரு.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை தொடா்ந்து பெற்றுத் தருவேன்.
மாவட்டத்தில் பல்வேறு பொருளாதார வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்கு, மத்திய அரசால் நிறைவேற்ற வேண்டிய துறைசாா்ந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மகளிா் திட்ட இயக்குநா் அமுதா, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.