கரூா் பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் மீண்டும் தோ்வு!
கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். கரூா் கோட்டபொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் இதை சனிக்கிழமை அறிவித்தாா்.
இதையடுத்து வி.வி.செந்தில்நாதனுக்கு, கே.பி.ராமலிங்கம், மேலிட பாா்வையாளா் சிவசுப்ரமணியம், மாவட்ட செயலாளா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், பொதுச் செயலாளா்கள் சக்திவேல் முருகன், ஆறுமுகம் உள்ளிட்ட கட்சியினா் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா். இதேபோல பொதுக்குழு உறுப்பினா்களாக சண்முகசுந்தரம், ராமநாதன்பிள்ளை, சரவணன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.