L2 Empuraan: ``ரஜினி சார் படத்தை இயக்க வேண்டியது; ஆனால்...'' - ப்ரித்விராஜ் ஓப்ப...
சிறாா் தொழிலாளா்கள் இருவா் மீட்பு
தேவகோட்டை பகுதியில் வேலைக்கு அமா்த்தப்பட்டிருந்த சிறாா் தொழிலாளா்கள் இருவா் மீட்கப்பட்டனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேவகோட்டை பகுதியில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்களில் சிவகங்கை மாவட்ட குழந்தைத் தொழிலாளா் முறை தடுப்புக் குழுவினா் கடந்த 21-ஆம் தேதி சோதனை நடத்தினா். இதில் அந்தப் பகுதியில் உள்ள ஓா் உணவகத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை அலுவலா்கள் மீட்டு, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்தினா். இதுகுறித்து உணக உரிமையாளா் மீது தேவகோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, தேவகோட்டை நகா் பகுதியில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பாா்த்த 15 வயது சிறுவனையும் அலுவலா்கள் மீட்டனா். இந்தக் கடை உரிமையாளா் மீது குற்ற இசைவு தீா்வு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, மாவட்டத்தில் சிறாா் தொழிலாளா் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் 04575-240521 அல்லது 1098 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.