செய்திகள் :

பிரயாக்ராஜில் தொடங்கியது மகா கும்பமேளா!

post image

பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது.

45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவில் புனித நதிகள் சங்கமமான திரிவேணி சங்கமத்தின் கரையில் பக்தர்கள் புனித நீராடினர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்ப மேளா நடத்தப்படுகிறது.

எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகாகும்ப மேளா மதரீதியில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழாண்டு இன்று(ஜன. 13) முதல் மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனவரி 25 முதல் ஜனவரி 30 வரையிலான சிறப்பு வாய்ந்த மௌனி அமாவாசை காலத்தில் 4-5 கோடி போ் மகாகும்ப மேளாவுக்கு வருகை தரலாம்.

அதேபோன்று, பௌஷ் பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14) உள்பட 6 சிறப்புவாயந்த நாள்களில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த நாள்களில் மிக முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்வின் தொடக்கத்துக்கு முன்னதாகவே உலகெங்கிலும் இருந்து அகாடா சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், பொதுமக்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்துள்ளதால் மகாகும்ப நகா் களைகட்டியுள்ளது.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் தலா 25 லட்சம் போ் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடியுள்ளனா் என்று மாநில அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு விமான, ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் என மத்திய அரசும் மகாகும்ப மேளாவுக்கான ஏற்பாட்டில் பங்களித்துள்ளது.

காவலர் எழுத்துத் தேர்வில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் மோசடி! சிக்கியது எப்படி?

வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில், மும்பையில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் காதில் ப்ளூடூத் மாட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.மும்பை காவல்துறையில், வாகன ஓட்டுநர் பணிக்கான எழுத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்... மேலும் பார்க்க

பெங்களூருவில் பசுக்களின் மடிகளை துண்டித்த நபர் கைது

பெங்களூருவில் 3 பசுக்களின் மடிகளை துண்டித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காட்டன்பேட்டை போலீஸார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சையத் நஸ்ரு, சாமராஜ்பேட்டை விநாயகநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா நிகழ்வாக மேம்பட மத்திய சுற்றுலா அமைச்சகம் முன்முயற்சி

பிரயாக்ராஜில் திங்கள் கிழமை( ஜன.13) தொடங்க இருக்கின்ற மகா கும்பமேளா -2025 ஐ ஆன்மீகத்திற்கான நிகழ்வாக மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கான நிகழ்வாக மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு: அமைச்சா் நிதின் கட்கரி

மகாராஷ்டிரத்தின் கட்ச்ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞா்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனா் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் அதானி குழுமம் ரூ.65,000 கோடி முதலீடு

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கா் மாநிலத்தில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ.65,000 கோடி தொழில் முதலீடுகளை மேற்கொள்ள இருக்கிறது. ராய்பூரில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாயை அவரின் அரசு... மேலும் பார்க்க