சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்
2025 - 26 நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 4.3 - 4.7% ஆக நிலைப்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிப் பங்கு முதலீட்டு நிபுணர்களைக் கொண்ட பி.எல். கேப்பிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உணவுப் பொருள்களின் விலை சீராகவும் விவசாய உற்பத்தி நிலையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எல். கேப்பிடல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உணவு பணவீக்கம் காரணமாக 2024-ஆம் ஆண்டில் உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் அதிகமாக இருந்தது. ஆனால், 2025-ல் உணவுப் பொருள்களின் விலையை சீராக்க விவசாய உற்பத்தி, ராபி பயிர் உற்பத்தி ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.
2024-ல் பணவீக்கம் அதிகரித்ததற்கு காலநிலை மாற்றம், வெப்ப அலை, கடுமையான மழைப்பொழிவு, விவசாய விளைச்சல் பாதிப்பு ஆகியவை விலை ஏற்றத்துக்கு காரணங்களாக அமைந்தன.
நாட்டின் பணவீக்கத்தை 2 - 6 சதவீதத்தில் இருக்குமாறு கவனித்துக்கொள்ள ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.