செய்திகள் :

இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி

post image

ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்ட் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமானார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்குப் பதிலாக அணியில் மற்றொரு இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிக்க: பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

இளம் வீரரான நாதன் மெக்ஸ்வீனிக்கு ஆஸ்திரேலிய அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார்.

வித்தியாசம் இருக்கிறது

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள நாதன் மெக்ஸ்வீனி, ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கும் இலங்கையில் விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு பயிற்சி பெற்றுள்ளேன். அந்த பயிற்சி இதுவரையிலான ஷீல்டு போட்டிகளில் எனக்கு கைகொடுத்துள்ளது. ஆனால், இலங்கையில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும், இலங்கையில் எதிர்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

மிகவும் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான மிட்ச் ஸ்வெப்சன் மற்றும் மாட் குன்ஹிமேனுடன் குயின்லாந்தில் வளர்ந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நான் அதிக அளவிலான சுழற்பந்துவீச்சினை எதிர்கொண்டுள்ளேன். அதுவும் தரமான சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடியுள்ளேன். இந்த அனுபவங்களை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முறை எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 ஆம் தேதி காலேவில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறவில்லை: வங்கதேச வீரர்

சரியாக விளையாடாததால் சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை என அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் ம... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம்... மேலும் பார்க்க

2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஆட விரும்பும் ஸ்டீவ் ஸ்மித்!

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் விளையாட விரும்புவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் சமீபத்தில் நடந்து ம... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் துபையில் நடைபெற்ற மெகா... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 13) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை!

ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து 14 வயது மாணவி சாதனை படைத்துள்ளார்.19 வயதுக்குள்பட்ட மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேகாலயாவுக்கு எதிரா... மேலும் பார்க்க