செய்திகள் :

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

post image

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி மும்பை புறநகர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்ற போதிலும் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக மூத்த வழக்குரைஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அறிக்கையை தாக்கல் செய்த, மூத்த வழக்குரைஞர், இருவரையும் நிரபராதிகள் என்று அறிவித்து, அவர்களுக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு மூத்த வழக்குரைஞர் தனது வாதத்தை முன் வைத்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகள் சார்பில் மூத்த வழக்குரைஞர் எஸ்.முரளிதர் வாதிடுகையில், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது, ​​புலனாய்வு அமைப்புகள் செய்யும் ஒரு சமுதாயத்தைச் சார்ந்த முறையை குறிப்பிட்டுப் பேசினார்.

குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வானது கடந்த ஐந்து மாதங்களாக நாள்தோறும் விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை புறநகர் ரயில் சேவையில், கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, மேற்கு வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதில் 180 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அதில் 5 பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர அரசு, மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில்தான், இரண்டு பேர் நிரபராதிகள் என்று கூறி மூத்த வழக்குரைஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அப்பாவிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தனது வாதத்தின்போது குறிப்பிட்டார். நாளையும் தொடர்ந்து இவர் தனது வாதத்தை முன்வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி தேர்தலில் பொது நன்கொடை பிரசாரம்: முதல் நாளில் ரூ.19 லட்சம் ஈட்டிய ஆம் ஆத்மி

புது தில்லி : தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா... மேலும் பார்க்க

புத்தர் வடிவ டிரம்ப் சிலைகள் ரூ.2.30 லட்சத்துக்கு விற்பனை!

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி.வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அ... மேலும் பார்க்க

அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு

ஒடிசா அரசு அவசரநிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதற்கான அரசாணையை மாநில உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: தொலைந்துபோன 250 பேர் குடும்பத்துடன் சேர்ப்பு!

மகா கும்பமேளாவை தொடங்கியதையடுத்து, பிரயாக்ராஜில் இன்று லட்சக்கணக்கானோர் குவிந்த நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தில், குடும்பத்திலிருந்து தொலைந்துபோன 250 பேர், கும்பமேளா நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைய... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு 2 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் மிகக் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.இன்று வணிகம் நிறைவடைந்தபோது, ஒரே நாளில் 57 காசுகள் ... மேலும் பார்க்க