செய்திகள் :

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

post image

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.58 கோடியும் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் நபார்டு- ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.58 கோடியும் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று(ஜன. 13) இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக மக்களுக்கு நேரடி தொடர்பு வசதியினை வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்தில் ஊரகச் சாலைகள் கடைசி இணைப்பாக கருதப்பட்டாலும், ஊரக பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதியினை வழங்குவதில் மிக முக்கிய இணைப்பாக ஊரகச் சாலைகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு, சுமார் 1 லட்சத்து 37 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட பரந்த சாலைத் தொகுப்பினை கொண்டுள்ளது. ஊரகச் சாலைத் தொகுப்பினை மேம்படுத்தி அதன் மூலம், மாநிலத்தில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கும் சாலை வசதியினை உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையினை இந்த அரசு கொண்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், ஊரகச் சாலைகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்த இந்த அரசு, நபார்டு- ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 37 மாவட்டங்களில் 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ. 804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி:

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 24.49 கோடி மதிப்பீட்டில், 36.94 கி.மீ நீளமுள்ள 19 சாலைகள்,

மதுரை மாவட்டத்தில் ரூ. 37.30 கோடி மதிப்பீட்டில், 57.58 கி.மீ நீளமுள்ள 30 சாலைகள்,

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 25.78 கோடி மதிப்பீட்டில், 44.11 கி.மீ நீளமுள்ள 24 சாலைகள்,

சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 35.30 கோடி மதிப்பீட்டில், 58.22 கி.மீ நீளமுள்ள 26 சாலைகள்,

கடலூர் மாவட்டத்தில் ரூ. 55.20 கோடி மதிப்பீட்டில், 86.96 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள்,

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ. 50.72 கோடி மதிப்பீட்டில், 91.88 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள்,

கரூர் மாவட்டத்தில் ரூ. 41.26 கோடி மதிப்பீட்டில், 92.54 கி.மீ நீளமுள்ள 46 சாலைகள்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 10.96 கோடி மதிப்பீட்டில், 11.42 கி.மீ நீளமுள்ள 7 சாலைகள்,

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 60.08 கோடி மதிப்பீட்டில், 73.08 கி.மீ நீளமுள்ள 38 சாலைகள்,

விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 40.03 கோடி மதிப்பீட்டில், 74.39 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 12.29 கோடி மதிப்பீட்டில், 19.03 கி.மீ நீளமுள்ள 10 சாலைகள்,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 9.77 கோடி மதிப்பீட்டில், 18.41 கி.மீ நீளமுள்ள 11 சாலைகள்,

தென்காசி மாவட்டத்தில் ரூ. 15.58 கோடி மதிப்பீட்டில், 32 கி.மீ நீளமுள்ள 14 சாலைகள்,

தேனி மாவட்டத்தில் ரூ. 10.44 கோடி மதிப்பீட்டில், 20.20 கி.மீ நீளமுள்ள 12 சாலைகள்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 14.83 கோடி மதிப்பீட்டில், 29.57 கி.மீ நீளமுள்ள 17 சாலைகள்,

திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 31.05 கோடி மதிப்பீட்டில், 60.20 கி.மீ நீளமுள்ள 33 சாலைகள்,

அரியலூர் மாவட்டத்தில் ரூ.23.45 கோடி மதிப்பீட்டில், 34.01 கி.மீ நீளமுள்ள 15 சாலைகள்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.6.11 கோடி மதிப்பீட்டில், 12.93 கி.மீ நீளமுள்ள 9 சாலைகள்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.22.33 கோடி மதிப்பீட்டில், 39.54 கி.மீ நீளமுள்ள 23 சாலைகள்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.15.44 கோடி மதிப்பீட்டில், 27.55 கி.மீ நீளமுள்ள 15 சாலைகள்,

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.7.76 கோடி மதிப்பீட்டில், 16.63 கி.மீ நீளமுள்ள 7 சாலைகள்,

சேலம் மாவட்டத்தில் ரூ.32.10 கோடி மதிப்பீட்டில், 47.07 கி.மீ நீளமுள்ள 26 சாலைகள்,

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.11.14 கோடி மதிப்பீட்டில், 19.30 கி.மீ நீளமுள்ள 11 சாலைகள்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.20.05 கோடி மதிப்பீட்டில், 42.16 கி.மீ நீளமுள்ள 23 சாலைகள்,

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.12.08 கோடி மதிப்பீட்டில், 24.66 கி.மீ நீளமுள்ள 8 சாலைகள்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.21.83 கோடி மதிப்பீட்டில், 38.79 கி.மீ நீளமுள்ள 23 சாலைகள்,

இதையும் படிக்க: ஜன.15 நெட் தேர்வு நடைபெறாது - யுஜிசி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.25.96 கோடி மதிப்பீட்டில், 41.66 கி.மீ நீளமுள்ள 20 சாலைகள்,

ஈரோடு மாவட்டத்தில் ரூ.17 கோடி மதிப்பீட்டில், 29.95 கி.மீ நீளமுள்ள 17 சாலைகள்,

வேலூர் மாவட்டத்தில் ரூ.22.77 கோடி மதிப்பீட்டில், 31.37 கி.மீ நீளமுள்ள 13 சாலைகள்,

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.11.46 கோடி மதிப்பீட்டில், 21.27 கி.மீ நீளமுள்ள 11 சாலைகள்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.33.10 கோடி மதிப்பீட்டில், 40.36 கி.மீ நீளமுள்ள 21 சாலைகள்,

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில், 23.93 கி.மீ நீளமுள்ள 8 சாலைகள்,

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.10.44 கோடி மதிப்பீட்டில், 20.57 கி.மீ நீளமுள்ள 14 சாலைகள்,

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16.81 கோடி மதிப்பீட்டில், 36.98 கி.மீ நீளமுள்ள 24 சாலைகள்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.26.22 கோடி மதிப்பீட்டில், 54.43 கி.மீ நீளமுள்ள 31 சாலைகள்,

நீலகிரி மாவட்டத்தில் ரூ.13.40 கோடி மதிப்பீட்டில், 14.50 கி.மீ நீளமுள்ள 7 சாலைகள்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.20.94 கோடி மதிப்பீட்டில், 28.76 கி.மீ நீளமுள்ள 16 சாலைகள், என மொத்தம் 37 மாவட்டங்களில் 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்தும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்புப் பணிக மேற்கொள்ள ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) தொடக்கி வைத்தார்.கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுற்று வருகிறது. இ... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் இட்லி கடை பட புதிய போஸ்டர்கள்!

இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நட... மேலும் பார்க்க

பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10 பேர் பலி!

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் ... மேலும் பார்க்க

பெயரை மாற்றினார் 'ஜெயம் ரவி'!

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி/ரவி மோகன் என மாற்றிக் கொண்டார்.இன்றிலிருந்து ரவி / ரவி மோகன் என்று அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் நடிகர் ஜெயம் ரவி க... மேலும் பார்க்க