செய்திகள் :

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

post image

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) தொடக்கி வைத்தார்.

கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுற்று வருகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தொடக்க விழாவினைத் தொடர்ந்து ஜன.14 முதல் 17-ஆம் தேதி வரை தினமும் மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், ஏகாம்பரநாதா் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகா் பூங்கா, கே.கே.நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி.விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 10 பேர் வேட்பு மனு

இந்த கலை நிகழ்வுகளை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் நிகழ்த்தவுள்ளனா்.

குறிப்பாக, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், பழங்குடியினா் நடனம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக் கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தவுள்ளனா்.

விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு ... மேலும் பார்க்க

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் இட்லி கடை பட புதிய போஸ்டர்கள்!

இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நட... மேலும் பார்க்க

பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10 பேர் பலி!

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் ... மேலும் பார்க்க

பெயரை மாற்றினார் 'ஜெயம் ரவி'!

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி/ரவி மோகன் என மாற்றிக் கொண்டார்.இன்றிலிருந்து ரவி / ரவி மோகன் என்று அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் நடிகர் ஜெயம் ரவி க... மேலும் பார்க்க