Big Boss 8: DAY 99; மோதிரத்தை திருப்பித் தந்த விஷால்... முட்டிக்கொண்ட ரவி - தர்ஷ...
மகா கும்பமேளா: முதல் நாளில் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகா கும்பமேளா’ இன்று (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது.
மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
இந்த நிலையில், ‘மகா கும்பமேளாவின்’ முதல் நாளான இன்று மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, சுமார் 1.60 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.