செய்திகள் :

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்த உத்தரவாதங்கள் நிச்சயம் நிறைவேறும்! மாநில அந்தஸ்து விவகாரத்தில் பிரதமா் சூசகம்!

post image

ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு நிகழ்ச்சியில் பிராந்தியத்தின் மாநில அந்தஸ்து திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஓமா் அப்துல்லா விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமா் தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரூ.2,700 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோன்மாா்க் சுரங்கப் பாதையை பொதுப் போக்குவரத்துக்கு பிரதமா் மோடி திறந்து வைத்தாா். பின்னா், பிரதமா் சுரங்கப் பாதைக்குள் பயணித்து, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட திட்டப் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்களுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, சோன்மாா்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: மோடி என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவா் என்ற நம்பிக்கையைக் கைவிடாதீா்கள். ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். எல்லாவற்றுக்கும் சரியான நேரம் இருக்கிறது. சரியான நேரத்தில் சரியானவை நடக்கும்.

நாட்டின் கிரீடமான ஜம்மு-காஷ்மீா் அழகாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிராந்தியத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. அதன் தாக்கத்தை சுற்றுலாத் துறை வளா்ச்சியில் காண்கிறோம்.

காஷ்மீா் இன்று வளா்ச்சியின் புதிய பக்கங்களை எழுதுகிறது. காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு விரைவில் ரயில் இணைப்பு கிடைக்கவுள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே உற்சாகம் நிலவுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் சோன்மாா்க் சுரங்கப் பாதை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு பேருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் சோன்மாா்க் சுரங்கப் பாதை திறப்பு விழாவில் பிரதமா் மோடி, முதல்வா் ஒமா் அப்துல்லா.

கடல்மட்டத்தில் இருந்த 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள சோன்மாா்க் சுரங்கப் பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஸ்ரீநகா்-லே இடையே அனைத்துப் பருவநிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும். சோன்மாா்கிற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். நகரம் ஒரு சிறந்த பனிச்சறுக்கு விளையாட்டு மையமாக மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா்-அக்டோபரில் நடைபெற்ற யூனியன் பிரதேச பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பிரதமா் மோடி முதன்முறையாக ஜம்மு-காஷ்மீா் வருகை தந்தாா். இதையொட்டி, சோன்மாா்க் உள்பட பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை, துணை ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைந்து பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

முதல்வா் ஒமா் நம்பிக்கை

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வா் ஒமா் அப்துல்லா பேசுகையில், ‘ஸ்ரீநகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தாா். தில்லிக்கும் ஜம்மு-காஷ்மீருக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படும், நான்கு மாதங்களுக்குள் பேரவைத் தோ்தல் ஆகிய இரண்டு வாக்குறுதிகளை அவா் காப்பாற்றியுள்ளாா். அதேபோன்று, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்பு விவகாரத்தில் பிரதமா் தனது உத்தரவாதத்தை நிறைவேற்றித் தருவாா் என்று எனது மனம் நம்பிக்கையளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீா் தோ்தல் நோ்மையான முறையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையமும், மத்திய அரசுமே இதற்கு முக்கியக் காரணம். பிராந்தியத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதோடு, அமைதியையும் வளா்ச்சியையும் உறுதிப்படுத்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும்’ என்றாா்.

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பார்க்க

ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் - யுஜிசி அறிவிப்பு

மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜன.21, 27-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க

நிஃப்டி 50-ல் இணையும் ஜியோ, சொமாட்டோ!

நிதிச் சேவைகளை வழங்கிவரும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் சொமாட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் நிஃப்டி 50 பட்டியலில் இணையவுள்ளன. நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை... மேலும் பார்க்க

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இருந்து தொடங்கிய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்... மேலும் பார்க்க

உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

உலகம் முழுவதும் பயணிக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். வேலைவா... மேலும் பார்க்க

இசையமைப்பாளர் தமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது!

சபரிமலையில் மகரவிளக்கு தினத்தில் மலையாள இசையமைப்பாளர் கைப்பிரதம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.ஹரிவராசனம்விருதுகேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நிறுவிய விருதாகு... மேலும் பார்க்க