செய்திகள் :

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

post image

தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பொதுப்பணித் துறை அதிகாரி மீது தில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனவரி 7 ஆம் தேதி அரசு வாகனத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக முதல்வர் அதிஷிக்கு எதிராக தேர்தல் நடத்தும் அதிகாரி முதலில் புகார் அளித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக தில்லி முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கோவிந்த் புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் உதவி ஆணையர் கல்காஜியிடம் புகார் கடிதம் அளிக்கப்பட்டது.

இதுபற்றி முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக அரசு வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

தேர்தலின் போது பிரசாரம் தொடர்பான பயணங்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடக்கம்!

நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று(ஜன. 14) தொடங்கி வைத்தார். மஞ்சள் வாரிய தலைவராக பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். புது தில்... மேலும் பார்க்க

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!

தெற்கு கொல்கத்தாவின் பாகாஜ்தீன் பகுதியிலுள்ள வித்யாசாகர் காலனியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இன்று(ஜன. 14) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்ச்சேதமோ, யாருக... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பங்கு என்ன? ஆம் ஆத்மி

இந்தியா கூட்டணியில் தனது பங்கு என்ன என்பதையே காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள தவறிவிட்டது என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 5ஆம் தேதி நடைபெறவ... மேலும் பார்க்க

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி: ராகுல் விமர்சனம்

தில்லியை பாரீஸ், லண்டனைப் போன்று மாற்றுவேன் என்ற அரவிந்த் கேஜரிவாலின் வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தில்லியில் பராமரிப்பின்றி கிடக்கும் சாக்கடை கால்வாய்களைக் குறிப்ப... மேலும் பார்க்க

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பார்க்க

ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் - யுஜிசி அறிவிப்பு

மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் ஜன.21, 27-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட... மேலும் பார்க்க