செய்திகள் :

கடல் அன்னையை சாந்தப்படுத்தும் ஷப்த கன்னிகள்.. பொங்கல் தினத்தில் மீனவர்கள் கொண்டாடும் நன்றி திருவிழா!

post image

தங்கள் வாழ்விற்கும் வளத்திற்கும் உறுதுணையாக இருப்பவர்களுக்கு நன்றி கூறி கொண்டாடுவது தமிழரின் மரபு. வேளாண்மைக்கு வழிகாட்டும் கதிரவன். உழவுக்குத் துணை நிற்கும் காளைகள் என தங்களுக்கு உதவியாக  இருப்பவர்களைக் கொண்டாடுவதற்கே என்றே உருவாக்கப்பட்டது அறுவடை திருநாளான தைப் பொங்கல். இந்த வரிசையில்  இணைந்திருக்கிறது காலங்காலமாக தங்கள் வாழ்வாதாரமாக விளங்கி வரும் கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் 'ஷப்த கன்னிகள் பொங்கல் விழா'.

 தமிழகத்தின் நீண்ட நெடிய கடற்கரை பகுதியைக் கொண்டிருப்பது ராமநாதபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தின் பிரதான தொழிலாக மீன்பிடித்தலும், விவசாயமும் இருந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் தொழிலுக்கு உதவும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்க பொங்கல் திருநாளை கொண்டாடுவது போல் தங்கள் தொழிலுக்கு உதவும் கடலுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை பாரம்பரியமாக கொண்டாடி வருகிறார்கள் ஒரு மீனவ கிராம மக்கள்.

நன்றி செலுத்த செல்லும் கிராம மக்கள்

ராமநாதபுரத்தில் இருந்து தொண்டில் செல்லும் சாலையில் உப்பூரின் அருகில் அமைந்துள்ளது மோர்ப்பண்ணை எனும் கிராமம். இங்கு 850-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் நம்பியிருக்கும் ஒரே தொழில் மீன்பிடித்தல் மட்டுமே. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப்படகின் மூலம் நாள்தோறும் ஐந்தாறு கடல் மைல் தூரம் கடலில் பயணித்து மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். அவ்வாறு சென்று திரும்பும் மீனவர்களுக்குத் தேவையான மீன் வளம் பெருகவும், ஆக்ரோஷ கொந்தளிப்பினால் ஏற்படும் ஆபத்துகள் உருவாகாமல் காக்கவும் வேண்டி தை முதல் நாளில் கடல் எனும் கங்கை மாதாவுக்கு 'ஷப்த கன்னிகள் பொங்கல்' படைக்கும் விநோத வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த வழிபாடு குறித்து கூறும் மோர்ப்பண்ணை கிராம தலைவர் வீரமாகாளி, ''நாங்க எல்லாருமே மீனவர்கள்தான். இந்த ஊருல 350 நாட்டுப்படகுகள் இருக்கு. இந்த படகுகளில் சென்று நண்டு, மீன், கனவாய், இறால் போன்றவற்றை பிடித்து வருவதன் மூலம் கிடைக்கும் வருவாயினை கொண்டு வாழ்க்கை நடத்தி வர்றோம். எங்களுடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து மீன்பிடிப்பை விட்டா வேறு தொழில் எங்களுக்குத் தெரியாது. அப்படியான சூழலில் எங்களை வாழவைத்து வரும் இந்த கடலினை எங்களது அன்னையாகவே எண்ணி வர்றோம். அந்த கடல் அன்னை ஆக்ரோஷம் அடையாமல் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் எங்களுக்கு ஆபத்து ஏதும் இல்லாம காக்கவும், போதுமான மீன்வளத்தைக் காலமெல்லாம் அழியாமல் தந்து உதவும் கடல் அன்னைக்கு நன்றி தெரிவிக்கவும் விழா எடுத்து வர்றோம்.

விரதமிருந்து கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் ஷப்த கன்னிகள்
கிராம மக்களுடன் ஷப்த கன்னிகள்

மார்கழி மாத கடைசியில் இதுக்கென ஊர்க் கூட்டம் கூட்டுவோம். அந்த கூட்டத்துல கிராமத்தைச் சேர்ந்த எல்லா குடும்பத்தினரும் கலந்துக்கிருவாங்க. அந்தக் குடும்பங்களை சேர்ந்த பூப்படையாத 7 சிறுமிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை அம்மனாக வழிபடுவோம். தை திங்களின் முதல் நாளான பொங்கல் அன்று இங்குள்ள ஶ்ரீ ரணபத்ர காளியம்மன் கோயிலில் அந்த சிறுமிகள் அம்மன் வேடம் தரித்து 7 பானைகளில் பொங்கல் வைப்பார்கள். அந்த பொங்கலினை தென்னம்பாளையில் செய்யப்பட்ட சிறு படகில் வைத்து அதில் நெய் திரியிட்டு விளக்கேற்றுவார்கள்.

 பொங்கல் விளக்கு ஏற்றப்பட்ட தென்னம்பாளை படகுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் ஷப்த கன்னிகளான 7 சிறுமிகளின் பின்னால் ஊரே அணிவகுத்துச் செல்லும். கடற்கரையை அடைந்தவுடன் ஊர்த் தலைவர் அந்த படகினை இடுப்பளவு தண்ணீரில் சென்று கடலில் விடுவார். எங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி உதவியாக இருந்து வரும் கடல் அன்னை நாங்க செலுத்தும் இந்த நன்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதாக முழுசா நம்புறோம்.         

கடல் அன்னைக்கு பொங்கல் படையல்

மோர்ப்பண்ணை கிராமத்துல வாழும் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து வாழ்ந்து வர்றோம். ஊரில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நிர்வாகிக்க ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகளைத் தேர்வு செய்றோம். கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் ஷப்த கன்னிகள் திருவிழாவில் ஷப்த கன்னிகளாக தேர்வு செய்யப்படும் சிறுமிகள் போட்டிகள் ஏதும் இன்றி கிராம மக்களின் முழு ஒப்புதலோடு தேர்வு செய்யப்படுவாங்க. எல்லா தரப்பு குடும்பங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த தேர்வு இருக்கும்.

ஒரு முறை ஷப்த கன்னியாக தேர்வு செய்யப்படும் சிறுமியை மறுமுறை தேர்வு செய்ய மாட்டோம். இந்த ஆண்டு நதிஸ்கா, விசீமா, வைஸ்ணவி, அரிய அஸ்மிதா, சமைய பார்த்தனா, சஸ்மிதா, தணிகாஶ்ரீ ஆகிய 7 சிறுமிகளை அம்மனாக தேர்வு செய்து எந்த போட்டி பொறாமையும் இந்த நன்றி திருவிழாவை சிறப்பா கொண்டாடினோம். இதன் மூலம் எங்களுக்குத் தாயாக விளங்கும் கடல் அன்னைக்கு எங்க நன்றிகடனை செலுத்தினோம்'' என்றார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிய TTV தினகரன் காளை; நின்று விளையாடிய VK சசிகலா காளை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்ட சசிகலா, தினகரன் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு மரபார்ந்த வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் பல ஊர்களில்... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: "வாடிவாசல்ன்னு வந்துட்டா இவன் கொஞ்சம் 'டெரர்' தான்" - வீர திருநங்கை அக்ஷயா

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் வாடி வாசலில் காளைகள் சீறி பாய்ந்து கொண்டிருக்க மறுபுறம் தன்னுடைய வாய்ப்பிற்காக நீண்ட வரிசைய... மேலும் பார்க்க

Pongal : அதென்ன `தமிழ் முஸ்லிம் பொங்கல்?' - முஸ்லிம்கள் எப்படி பொங்கல் கொண்டாடுவார்கள் தெரியுமா?!

தமிழ் கலாசாரத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் விழாவில் மிக முக்கியமானது பொங்கல். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள், ஆடி மாதத்தில் விதைத்த நெல்லை தை மாதத்தில் அறுவடை செய்து, தைப்பொங்கலை மிக விமரிசையாக கொண... மேலும் பார்க்க

அவனியாபுரம் : துறுதுறு இளைஞர்கள்... சீறும் காளைகள் - டிராக்டர், நிசான் கார் பெறப்போவது யார்?!

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகத்தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அவனியாபுரம் ... மேலும் பார்க்க

Mumbai: 1,000 பேர் கலந்துகொண்ட தாராவி பொங்கல்... சிறப்பு விருந்தினர் ஓவியா கலகல பேச்சு!

ஒவ்வோர் ஆண்டும் மும்பை, தாராவியில் தமிழர்கள் அலைகடலெனத் திரண்டு பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைக்கும் பொங்கல் விழாவானது 90 அடி சாலையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.சக்தி விநாயகர் ... மேலும் பார்க்க

Pongal: அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை; உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!

விவசாயம், மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியில் மிகப் பெரிய மைல்கல். சரியான பயிர்களைக் கண்டறிந்து, காடு மேடுகளை உடைத்து நிலமாக்கி, அதை பண்பட உழுது, பருவம் பார்த்து விதைத்து, தண்ணீர் பாய்ச்சி அறுவடை செய்யு... மேலும் பார்க்க