கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் இடிந்து விபத்து!
Mumbai: 1,000 பேர் கலந்துகொண்ட தாராவி பொங்கல்... சிறப்பு விருந்தினர் ஓவியா கலகல பேச்சு!
ஒவ்வோர் ஆண்டும் மும்பை, தாராவியில் தமிழர்கள் அலைகடலெனத் திரண்டு பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைக்கும் பொங்கல் விழாவானது 90 அடி சாலையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
சக்தி விநாயகர் கோயிலில் 20-ம் ஆண்டு பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஓவியாவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள், பிரமுகர்கள் பேசிய பிறகு ஓவிய பேசினார்.
"தாராவியில் இருப்பது நம் ஊரில் இருப்பது போல இருக்கிறது. இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை, எனக்கு ரொம்ப சந்தோஷம்.
சக்தி விநாயகர் கோவில் 20ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு என்னை கூப்பிட்டதுக்கு இந்த கமிட்டிக்கும் மக்களுக்கு ரொம்ப நன்றி.
என் தமிழ் ரொம்ப சுத்தமா இருக்காது. ஏனெனில், அடிப்படையாக நான் கேரளா. ஆனாலும், என்னை வாழ வச்சது தமிழ்நாடுதான். அதுக்காக உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி." என்று பேசினார். பின்னர் குத்து விளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.
ரசிகர்கள் மற்றும் மக்களுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார் ஓவியா!