1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ...
தென் கொரிய அதிபர் மீதான கைது நடவடிக்கை மீண்டும் தோல்வி!
தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை இரண்டாவது முறையாக கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், அவரைக் கைது செய்ய புதன்கிழமை அதிகாலையில் அவரது வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.
யூன் சுக் இயோலை ஜனவரி 3 ஆம் தேதியில் கைது செய்ய முற்பட்டபோதும், அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில், அவரை கைது செய்யும் இரண்டாவது முயற்சியில் புதன்கிழமை அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.
இதையும் படிக்க:கிரீன்லாந்தை வாங்க புது முயற்சி! ஆதரவு சேகரிக்கும் டிரம்ப் கட்சியினர்!
ஆனால், கைது நடவடிக்கை குறித்து முன்னரே அறிந்ததைப்போல, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி, பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். மேலும், மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களே. இதனைத் தொடர்ந்து, யூன் சுக் இயோலின் வழக்குரைஞரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.