`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, நடப்பு அரசியல் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...
`ஆட்சியில் பங்கு என்கிற குரல் தற்பொழுது அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதில் உங்கள் நிலைப்பாடு என்ன?’
``எங்களைப் பொறுத்தவரை முதலாளித்துவ கட்சிகளோடு தொகுதி உடன்பாடு, வைத்துக் கொள்வோமே தவிர அவர்களுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. ஏனென்றால் அவர்கள் அவங்க கொள்கையை தான் நடைமுறைப்படுத்துவார்கள். அவங்க தான் மெஜாரிட்டி, அவங்க கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் உடைய ஒரு பங்காளியாக நாங்க இருக்கிறதுக்கு எப்போதுமே விரும்ப மாட்டோம். கேரளாவில் கூட்டணி அரசு இருக்கிறது என்றால் அது எங்கள் தலைமையிலான அரசு. அது இடதுசாரிகள் ஜனநாயக அமைப்புகள் மட்டுமே இருக்கக்கூடியது. முதலாளித்துவ கட்சிகள் எதையும் நாங்கள் அதில் சேர்க்கிறது இல்லை. அந்த மாதிரி தன்மை இருந்தால் தான் நாங்கள் அதில் சேருவோம். திமுக அதிமுக அல்லது மற்ற கட்சிகள் உடன் தொகுதி உடன்பாடு மட்டும் தான். தேர்தல் வெற்றிக்கான அவங்களுக்கு உள்ள பலம் எங்களுக்கு இருக்கின்ற பலம் என்ற ஒரு தொகுதி உடன்பாடு மட்டுமே தவிர ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது எங்கள் கொள்கையில் எப்போதுமே இல்லை.
அப்படிதான், ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் பதவியை தேடி வந்தது. ஆனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அதைவிட பெரிய பதவி இந்தியாவில் வேறு ஏதாவது இருக்கிறதா. பிரைம் மினிஸ்டர் பதவியே வேண்டாம் என்ற போது இங்கு ஒரு அமைச்சர் பதவி வந்து என்ன ஆகிவிடப் போகிறது.
`விமர்சனத்தை கூட தாங்கிக் கொள்ள முடியாத சக்தி திமுகவிற்கு இல்லாம போயிடுச்சா?’
``நாங்கள் ஒரு தனி கட்சி. நாங்கள் சுயேட்சையாக செயல்படக்கூடிய கட்சி எங்களுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது எங்களுக்கு என்று ஒரு தலைமை இருக்கிறது. அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு நாங்கள் இல்லை. நாங்க சொல்வதை எல்லாம் கேட்பதற்கு அவர்களும் இல்லை. ஒரு தேர்தலில் உடன்பாடு செய்து கொண்டோம். ஒரு தோழமை நட்புணர்வு என்பது தொடர்கிறது. அவர்கள் மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் போது தான் நாங்கள் வரவேற்று இருக்கிறோம். பாராட்டி இருக்கிறோம். மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிற பொழுது ஒரு கட்சி என்கிற முறையில், ஒரு எதிர்ப்பை எங்களுடைய கண்டனத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். ’
என்ற திருக்குறள் இருக்கிறது. தோழமையாய் இருந்தாலும் அவர்கள் தவறு செய்யும் பொழுது இடித்துரைப்பது, எடுத்துரைப்பது என்கிற முறையில் அவர்களை எங்களால் நெறிப்படுத்த முடியும். அதை விடுத்து, அவர்கள் என்ன செய்தாலும் வாயை மூடிக்கொண்டு நீங்கள் நல்லா செய்கிறீர்கள் நல்லா தவறு செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா. எனவே எங்களுடைய கடமையை தான் நாங்கள் செய்கிறோம்.
``அந்த மனப்பக்குவம் திமுகவிற்கு இருக்கிற மாதிரி தெரியவில்லையே.. உடனே கடும் விமர்சனம் கொடுக்கிறார்களே?”
``அன்றைக்கு தோழர் கே.பாலகிருஷ்ணன், அறிவிக்கப்படாத அவசரநிலை தமிழ்நாட்டில் நிலவுகிறதா என்கிற கேள்வியை பொதுக்கூட்டத்தில் எழுப்பினார். அதன் பிறகு தான் நீங்கள் சொல்கிற மாதிரி ஒரு விமர்சனம் வந்தது. எந்தப் போராட்டத்துக்குமே இங்கே காவல்துறையானது அனுமதி தர மறுக்கின்றது. போராடுகின்ற உரிமையை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. திமுகவோ அதிமுகவோ காங்கிரஸோ அந்த உரிமையை கொடுப்பதில்லை. அரசியல் சாசனம் பிரிவு 19ல் போராடுகின்ற உரிமையை, ஒன்று கூடுவதற்கான உரிமையை அரசியல் சாசனம் அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்கி இருக்கிறது. போராட்டத்தை தடுப்பதற்கு ஆளுங்கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது.
வேண்டுமென்றால் நீங்கள் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். போராடுவே கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அப்படி என்றால் என்னுடைய கோரிக்கையில் பொதுமக்களுடைய கோரிக்கையை பொதுவெளியில் அரசினுடைய கவனத்திற்கு கொண்டுவதற்கான எனக்கான வழி என்ன இருக்கிறது. போராட்டம் நடத்துவதனால் எல்லாத்தையும் செய்து விட போகிறீர்களா. இதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதனை மக்களிடத்தில் வெளிப்படுவதற்கான ஒரே வழி அதுதான்.”
`சட்டசபையில் அறவழியில் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுக்கிறோம் என்று சட்டத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் தெரிவித்துள்ளார்கள்?’
``அறவழி என்றால் என்ன. நான் கேட்கிறேன். அறவழிப் போராட்டம் என்று போடுவதுனாலையே அது அறவழி போராட்டமா. போராட்டம்னாலே எங்களுக்கு தெரிஞ்ச சில போராட்டத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல், தர்ணா, முற்றுகை இந்த மாதிரி சில வடிவங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். இதில் எது அறவழி அறம் அல்லாத வழி எது. உதாரணத்திற்கு எங்கள் மாநாட்டை ஒட்டி ஒரு ஊர்வலம் நடத்துகிறோம். அது அறவழியானதா அல்லது அறம் அல்லாத ஒரு வழியா. அது அறவழி ஊர்வலம் தான். அதற்கு ஏன் அனுமதி தரவில்லை.”
`உங்கள் கட்சி வளர்ந்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கிறார்களா திமுகவினர்?”
``ஒரு பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது இவர்கள் அநாவசியமாக குடைச்சல் கொடுத்துவிட்டு வருகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னமோ.(சிரிக்கிறார்) பொற்கால ஆட்சியில் சிபிஎம் வந்து தேவையில்லாத குடைச்சல் கொடுத்துட்டு இருக்காங்க அப்படின்னு நினைக்கிறாங்களா என்று தெரியவில்லை. நீங்கள் பொற்கால ஆட்சி, பொற்காலம் என்று எது வேணாலும் சொல்லிக்கோங்க. மக்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டுவர பிரச்சனை அல்லது நாங்கள் வைத்திருக்கிற கோரிக்கைகள் அல்லது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் இதை செய்யவில்லை என்று தான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ற ஒரு பெரிய புத்தகத்தை அடித்து வீடு வீடாக விநியோகம் செய்தார்கள். எல்லா கிராமத்தில் இருப்பவர்கள் கூட அவருடைய வீட்டின் கூரையில் சொருகி வைத்திருக்கிறார்கள். 505 வாக்குறுதிகள் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்பதனால் தான் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.”
``அவர்கள் கிட்டத்தட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறுகிறார்களே?”
``அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதுக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நிறைவேற்றி விட்டார்களா? இல்லை.
விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குவின்டால் நெல்லுக்கு ரூபாய் 2500 தருவதாக சொன்னார்கள். கரும்புக்கு நாலாயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். இதெல்லாம் அவர்களுடைய அறிக்கையில் இருக்கிறது. நிறைவேற்றி விட்டார்களா.
அப்புறம் எப்படி எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டார்கள் என்று சொல்கிறீர்கள். சட்டமன்றமே ஆண்டுக்கு 100 நாள் நடத்த போவதாக சொன்னார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டில் 15 நாட்கள் தான் நடந்திருக்கிறது. கேரளாவில் 65 நாட்கள் நடந்திருக்கிறது. 100 நாள் சட்டமன்றம் நடத்துவதாக அவர்கள் தான் சொன்னார்கள். ஆனால் இப்போது சட்டமன்ற உறுப்பினர் வேலை வெட்டியே இல்லாமல் இருக்கிறார்கள். சட்டமன்றமே இல்லை சட்டமன்ற உறுப்பினர் ஊரிலேயே சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள். 15 நாள் தான் சட்டமன்றம் வருடத்திற்கு, ஆனால் சம்பளம் மாதம் மாதம் உண்டு. மற்றொரு எல்லாம் வேலை செய்யாமல் இருந்தால் சம்பளம் கொடுத்து விடுவார்களா. ஆனால் எம்எல்ஏக்களுக்கு 15 நாள் மட்டும் தான் வருடத்தில் சட்டமன்றம் ஆனால் மாதம் சம்பளம் இதெல்லாம் என்ன நியாயம்.
சட்டமன்றத்தை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் அவர்கள் சொன்ன அடிப்படையில் நடத்த வேண்டும் என்கிற ஒரு அக்கறை அவர்களுக்கு இல்லை."
`திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று பல பேர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்?'
``கூட்டணியில் மாற்றம் என்பதே கிடையாது. காவல்துறையின் அணுகு முறையில் உள்ள பிரச்னையை நாங்கள் வெளிப்படுத்தி இருக்கிறோம். காவல்துறையினுடிய அணுகுமுறை மாறவில்லை என்றால் முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு அதனை சரி செய்ய வேண்டும். சட்டத்திற்கு விரோதமான முறையில் காவல்துறையாக இருந்தாலும் ஆட்சியாளர்களாக இருந்தாலும்... நடந்து கொள்வது என்பது சரியில்லை. இன்றைக்கு பேப்பரில் பார்க்கும் பொழுது திமுக மேலேயே வழக்கு போட்டிருக்கிறார்கள். திமுக மேலே வழக்கு போடுவது என்பது செய்தி இல்லை. நாளைக்கு அவர்கள் அதனை வாபஸ் வாங்கிடுவார்கள். ஆனால் எங்கள் மேல் பல நூற்றுக்கணக்கான வழக்குகள் என்பது இருக்கிறது. இவங்க வந்த பிறகு என் மேல் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இவங்க ஆட்சிக்கு வந்த பிறகு நான் சொல்கிறேன். சமீபத்தில் திருவள்ளூரில் நான் போராட்டம் நடத்தினேன், கலெக்டர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னையே முடிந்து போய்விட்டது. கோரிக்கை நிறைவேறி விட்டது. ஆனால் காவல்துறை வழக்கு போட்டிருக்கிறது. 135 பேர் மீது வழக்கு என்று எஸ்.பி செய்தி கொடுக்கிறார்.”
``காவல்துறை மந்திரிக்கு தெரிந்து செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா அல்லது காவல்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?”
``இங்கே ஒரு சாதாரண குற்றவாளிகள் மீது வழக்கு போடும் பொழுது அவர்கள் வழக்கு போட்டு விடுவார்கள். எங்களை மாதிரி ஆள் மீது வழக்கு போடும் பொழுது, மேலே உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் உயர் மட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் வழக்கு போடுவதற்கு வாய்ப்பில்லை. போட்டு வச்சுக்குவோம் நல்லது கெட்டதுக்கு உதவும் அப்படி என்கிற ஒரு அணுகுமுறையா தான் அது இருக்கிறது.”
முழுமையான பேட்டிக்கு...