செய்திகள் :

`தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே `இந்தியா’ கூட்டணி’ - கைவிரித்த சரத் பவார்

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூறிக்கொண்டிருக்கிறது. அதோடு மகாவிகாஷ் அகாடி கலைக்கப்பட்டுவிட்டதாக உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் தான் அப்படி சொல்லவில்லை என்று கூறிவிட்டார். அக்கட்சியின் கருத்துக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேயும் ஆதரவு கொடுத்துள்ளார். மகாவிகாஷ் அகாடியில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உத்தவ் தாக்கரே

இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல்களை சுட்டிக்காட்டி பேசிய சுப்ரியா, உள்ளாட்சி அமைப்புகளில் தங்களது கட்சியும் தனித்தே போட்டியிடும் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காங்கிரஸ் தனது வருத்ததத்தை தெரிவித்திருந்தது. இப்பிரச்னை குறித்து தேசியவாத காங்கிாஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் கூறுகையில், ``இந்தியா கூட்டணி தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். ஒரு போதும் மாநில அளவில் அல்லது உள்ளாட்சி மட்டத்திலான தேர்தல் குறித்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும்''என்றார். டெல்லி தேர்தல் குறித்து கேட்டதற்கு, ``அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பெ.சண்முகம்: `சாதி, மதம் மறுப்பு காதல் திருமணம்; 50 ரூபாய் செலவு’ - குடும்பம் முதல் அரசியல் வரை..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் உடனான நேர்காணலில் நமது பல்வேறு கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளிக்கிறார். இதில் அவரின் குடும்பம், அரசியல் வருகை, களப்பணி உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு, நடப்பு அரசியல் குற... மேலும் பார்க்க

`காங்கிரஸ் ஆதரித்தால் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டி'- எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பி.வி.அன்வர்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், நிலம்பூர் தொகுதியில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வென்றவர் பி.வி.அன்வர்.தொடர்ந்து 2-வது முறையாக சி.பி.எம் ... மேலும் பார்க்க

``பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"- அன்புமணி எச்சரிக்கை

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்... மேலும் பார்க்க

USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?

‘முழுக்க முழுக்க மோசடி'ஹெச்1பி அமெரிக்க விசா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பாக அண்மையில் வெடித்த விவாதம், டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களுக்குள்ளேயே குடியேற்றக் கொள்கை விவகாரத்தில் பிளவை ஏ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் அரசு காரணம் என்றால் காரி துப்புவேன்' - அஜித் விவகாரத்தில் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மிகவும் அரிதாகத்தான் தேர்தல் புறக்கணிப்பு செய்யும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படி ந... மேலும் பார்க்க