செய்திகள் :

``பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"- அன்புமணி எச்சரிக்கை

post image
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

அன்புமணி
அன்புமணி

சென்னை பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இராம்சர் தலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை நீரை உறிஞ்சி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணியை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் செய்கிறது. 115 வகையான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 9 ஊர்வன வகைகள், 46 வகை மீன்கள், 5 வகையான ஒட்டு மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள் போன்றவற்றின் வாழிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது.

அதை ஒட்டிய பகுதிகளில் குப்பை எரி உலை அமைக்கப்பட்டால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும். இத்திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991-ம் ஆண்டில் 187 எரி உலைகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 77 எரி உலைகள் மட்டுமே உள்ளன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் 250 நகரங்களின் மேயர்கள் ஒன்று கூடி, தங்களது நகரங்களில் எரி உலை திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியாவில் உருவாகும் குப்பை, எரி உலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரி உலைகள் தோல்வியடைந்தன. அவை மூடப்பட்டுவிட்டன. சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது ஆகியவை தான் தீர்வு ஆகும். இதை உணர்ந்து பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாமக நடத்தும்" என்று அறிக்கை மூலம் எச்சரிகை விடுத்திருக்கிறார்.

USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?

‘முழுக்க முழுக்க மோசடி'ஹெச்1பி அமெரிக்க விசா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பாக அண்மையில் வெடித்த விவாதம், டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களுக்குள்ளேயே குடியேற்றக் கொள்கை விவகாரத்தில் பிளவை ஏ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் அரசு காரணம் என்றால் காரி துப்புவேன்' - அஜித் விவகாரத்தில் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மிகவும் அரிதாகத்தான் தேர்தல் புறக்கணிப்பு செய்யும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்படி ந... மேலும் பார்க்க

ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | Imperfect show

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - "இதுவரை, ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி!" - ஸ்டாலின்* - பொள்ளாச்சி சம்பவம் குறித்து யார் உண்மையைச் சொன்னார்கள்? - சட்டமன்றத்தில் மோதல்!* - பாலியல் குற்றவாளிகளுக்கு மரண ... மேலும் பார்க்க

`1978-ல் சரத் பவார் தொடங்கிய துரோகத்திற்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது!' - அமித் ஷா பேச்சு

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை சந்தித்தது. இத்தோல்வியால் எதிர்க்... மேலும் பார்க்க