அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு
தனுஷ் கைவசம் இத்தனை படங்களா?
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த திரைப்படங்களைக் கைவசம் வைத்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அடுத்ததாக, தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: விரைவில் பிரபாஸ் திருமணம்! மணப்பெண் யார்?
இதுபோக, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இயக்குநர் வெற்றி மாறனுடன் தனுஷ் இணைய உள்ள அறிவிப்பும் வெளியாகி அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ராயனுக்குப் பின் எந்தப் படமும் வெளியாகாமலேயே அடுத்தடுத்து 8 படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ்!