ஆஸி. ஓபன்: இந்திய வம்சாவளி இளம் வீரருக்கு ஜோகோவிச் பாராட்டு!
நாளைமுதல் 4 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜன. 14-17 வரை மாற்றப்பட்டுள்ளது.
இது பற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது:
2025 ஆம் ஆண்டு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும் 17 ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்.
ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணை:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு - 75.. டாலருக்கு - 86: காங்கிரஸ் விமர்சனம்!
சனிக்கிழமை அட்டவணை:
1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
2. காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
3. காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணிமுதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.