செய்திகள் :

`ஆதரிக்கும் அண்ணமலை; சொந்தம் கொண்டாடும் தமிழிசை' - பாஜகவை விமர்சிக்க நாதக தயங்குகிறதா?

post image

`சீமான் எங்கள் டீம்’ என பா.ஜ.க தலைவர்கள் பிரகடனப்படுத்திவரும் இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் கனத்த மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. பா.ஜ.க-வை விமர்சிக்க கட்சித் தலைமை தடை ஏதும் விதித்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்து ராவணன் குடில் வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியுள்ளது.

பெரியார்
பெரியார்

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் எதிர்ப்பை மூர்க்கமாக முன்னெடுப்பதை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், `` எங்கள் கருத்தியலை தற்போது சகோதரர் சீமான் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரது பேச்சுகள் எங்களுக்கு பலம் சேர்க்கின்றன. பெரியாரை சீமான் கடுமையாக எதிர்ப்பது பா.ஜ.க-வுக்கு கிடைத்த வெற்றி. அவர் எங்கள் டீம் என்று சொல்வதைவிட எங்கள் கருப்பொருள் கூட்டாளி” என சொந்தம் கொண்டாடியிருக்கிறார். அதற்கு முன்பே `அண்ணன் சீமானுக்காக ஆதாரத்தை நான் தருகிறேன்’ என ஆஜரானார் அண்ணாமலை.

தமிழிசை, அண்ணாமலை

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் சிலர், ``பெரியாருக்கும் சமூநிதிக்கும் என்ன சம்பந்தம். பெரியாருக்கும் பெண்ணுரிமைக்கு என்ன சம்பந்தம் என்ற கேள்விகளை நா.த.க முன்வைக்கும்போது சீமான் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விலைப் போய்விட்டார் என்ற விமர்சனத்தை திராவிட தரப்பும் `சீமான் எங்களுடைய பார்ட்னர்` என பா.ஜ.க-வும் சொந்தம் கொண்டாடுகிறது. நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் பி டீம் என தி.மு.க கூட்டணியினர் தரப்பில் விமர்சித்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள், `சீமான் எங்கள் டீம்’ என பா.ஜ.க சொல்லும்போது மறுத்து ஒரு வார்த்தைக்கூட சொல்லமல் மெளனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது” என்கிறார்கள்.

சீமான்
சீமான்

இதனை ஆமோதித்துப் பேசிய நா.த.க-வின் உள்விவகாரம் அறிந்தவர்கள், ``பெரியார் எதிர்ப்பில் கட்சி உறுதியாக இருக்கும் நாம் தமிழர் மீது காவிச்சாயம் பூசப் பார்க்கிறது திராவிட அமைப்புகள். இந்நிலையில் பாசிச பா.ஜ.க நமக்கு அரணாக இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுவதும் அவர்கள் ஆதரிக்கும்போது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அமைதியாக இருப்பதும் கட்சியின் கொள்கை உறுதிக்கும் தேர்தல் அரசியலுக்கும் ஆபத்துதான். நாம் தமிழரை சுற்றி வளைக்கப் பார்க்கும் பா.ஜ.க-வை நோக்கி `நீங்கள் என்ன எங்களை ஆதரிப்பது.. சமூகநீதிக்கும், பெண்ணுரிமைக்கும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வுக்கு எதாவது சம்பந்தம் இருக்கிறதா.. மனுநீதியை ஆதரிப்போரின் ஆதரவை வெறுக்கிறோம்” எனும் அடையாள அறிக்கையாவது கட்சி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்ப்பார்ப்பு” என்றனர்

பா.ஜ.க-வின் ஆதரவை நாம்தமிழர் ஏற்குமா.. எதிர்க்குமா..என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

ஈரோடு இடைத் தேர்தல்: பிரதான கட்சிகள் புறக்கணிப்பு; ஆர்வம் காட்டும் சுயேச்சைகள்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை ஈரோடு ... மேலும் பார்க்க

Trump : 'குற்றவாளி தான்; ஆனால்...' - இன்று டிரம்பிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?!

டிரம்ப் பதவியேற்பதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது. இந்த நிலையில், இன்று அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் மீதான முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.2016-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசு க... மேலும் பார்க்க

பொங்கல் ஸ்பெஷல்: மதுரை - சென்னை இடையே மெமு ரயில் சேவை - விவரம் இதோ!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்கெனவே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதலாக சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட ம... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - முதல் நாளில் மூவர் வேட்புமனுத் தாக்கல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற... மேலும் பார்க்க