செய்திகள் :

பொங்கல் : வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ... காப்புடன் 'இதை'யும் சேர்த்து கட்டுங்க... ஏன்னா?

post image

பொங்கல் என்று சொன்னதும் சர்க்கரை பொங்கல், கரும்பு, ஜல்லிக்கட்டு என்பதெல்லாம் நினைவுக்கு வருவதைத் தாண்டி, இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. அந்த விஷயத்தோடு தான் பொங்கல் பண்டிகையே நம் வீடுகளில் தொடங்கும். இந்த க்ளூ வைத்தே 'என்ன அது?' என்பதை இந்நேரத்திற்கு கண்டுபிடித்திருப்பீர்கள்.

ஆம்...அது 'காப்பு கட்டுதல்' தான். பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து முடித்துவிட்டு போகி பண்டிகை நாள் அன்று அதாவது இன்று மாலை வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம் பூ ஆகிய மூன்றையும் ஒன்று சேர்த்து கட்டி வீட்டு வாசல் முதல் முற்றம் வரை அனைத்து இடங்களிலும் வைப்போம். இதை வைத்துவிட்டாலே, வீட்டில் பொங்கல் பண்டிகை களைக்கட்டி விடும்.

இந்தக் காப்பு கட்டுதலை சும்மா சடங்காக மட்டும் கடந்துவிட முடியாது. 'அதுக்கும் மேல' என்பதுபோல் இது சடங்கை தாண்டி, அறிவியல் நிரம்பியது. காப்பிற்கு பின்னால் இருக்கும் அறிவியலை நமக்கு விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.

சித்த மருத்துவர் - விக்ரம் குமார்.

"பொதுவாக, காப்பு கட்டுதல் மார்கழி கடைசி நாளில் வரும். இதற்கு முன்பான மாதங்களில் மழை மற்றும் பனிக்காலமாக இருந்திருக்கும். இந்தக் காலங்களில் மனித உடலின் சீதோசன நிலை மாறியிருக்கும். இதனால், எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அடுத்ததாக, மழை மற்றும் பனிக்காலத்தினால் வீட்டில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் வரக்கூடும். இந்த இரண்டையும் தடுக்கத்தான் காப்பு.

காப்பில் என்னென்ன முக்கியமாக கட்டுவோம்? வேப்பிலை, பீளைப்பூ என்று அழைக்கப்படுகின்ற சிறுகண்பீளை, ஆவாரம் பூ. முன்னர், மாவிலை, பிரண்டை, தும்பை போன்ற இன்னும் சில மூலிகைகளை சேர்த்து கூட கட்டுவார்கள். இப்போதும் இதை பின்பற்றினால் நல்லது தான். ஆனால், இப்போது மிக முக்கியமாக கட்டும் மூன்று மூலிகைகளை பற்றி பார்ப்போம்.

வேப்பிலை கிருமிநாசினி திறன் நிறைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதை வாசலில் கட்டும்போது பெரும்பாலும் நோய் கிருமிகளால் வீட்டிற்குள் நுழையாது.

அடுத்ததாக பீளைப்பூ. இதற்கு முன்பு இருந்த பனிக்காலத்தினால், நாம் தண்ணீர் அதிகம் குடித்திருக்கமாட்டோம். இதனால், சிறுநீரக கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. பீளைப்பூவை பொறுத்தவரை, அது சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்யவல்லது.

கிருமிநாசினி தன்மை கொண்ட சிறுபீளை, சிறுநீர்ப் பாதை தொற்றுக்களை அழித்து வெளியேற்றும் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. சிறுபீளையால் இரத்தக் குறைவு, சிறுநீர்எரிச்சல், நீரடைப்பு, கல்லடைப்பு நீங்கும் என்கிறது அகத்தியரின் ஓலை.

ஆவாரம்பூ

ஆவாரம்பூ. நாம் உண்ணும் உணவில் அதிகம் சேர்க்காத சுவை துவர்ப்பு. அந்தத் துவர்ப்பு சுவையை கொண்டது தான் ஆவாரம் பூ. குளிர்ச்சியை தரும் ஒன்று ஆவாரம் பூ. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வெயில் தாங்க முடியவில்லை என்றால் ஆவாரம்பூ இலையை தலையை கட்டிக்கொள்வார்கள். இது அந்த அளவுக்கு குளிர்ச்சியானது. மேலும், ஆவாரம்பூ சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்கும் நல்ல மருந்து என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதெல்லாம் சரி...இந்த மூலிகைகளை ஏன் வீடுகளில் கட்டுகிறார்கள் என்ற கேள்வி இப்போது எழும். இந்த இடத்தில் 'வருமுன் காப்போம்' என்பதை சற்று மாற்றி, 'வருமுன் தயாராக இருப்போம்' என்று எடுத்துகொள்வோம்.

பனிக்காலம் முடித்து வரும் தை மாதத்தில் எதாவது உடல் உபாதைகள் ஏற்பட்டால், கடைசி நேரத்தில் 'அங்கே...இங்கே' என மூலிகைகளை தேடி கொண்டிருக்காமல், முன்னதாகவே தயாராக இருப்பதற்கு இந்த ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்திருக்கலாம்.

'இது நல்லது... இதை செய்யுங்கள்' என்றால் குறிப்பிட்ட விஷயத்தை செய்ய முன்வருபவர்கள் 100-ல் 10 பேர் கூட இருக்கமாட்டார்கள். அதனால், அறிவியலோடு ஆன்மீகத்தையும் சேர்த்து நம் முன்னோர்கள் இந்த சடங்கை உருவாக்கியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

ரூ.50 டு ரூ.500; பொங்கல் பானை, வாட்டர் பாட்டில் இன்னும் பல... மண்பாண்ட தொழில் ஸ்பாட் விசிட்!

பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான்! பொங்கலுக்கு விடுமுறை ஒருபுறம், விருந்தினர்கள் மறுபுறம் என வீடு விசேஷமாக காட்சியளிக்கும். புத்தாடை உடுத்தி, குலதெய்வ கோயிலுக்குச் சென்று, பொங்கல் பானை வைத்து, படையல் ப... மேலும் பார்க்க

தேங்காய் சிரட்டையில் புத்தர், அம்பேத்கர்... கலைநயமிக்க பொருள்களை உருவாக்கி அசத்தும் இளைஞர்!

படைப்பாற்றல் என்ற சொல் புதிய யோசனை, கலை, கண்டுபிடிப்பு என பலவற்றை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். அந்த ஆற்றல்தான் நம்மை வித்தியாசப்படுத்தி, முன்னோக்கி நகர்த்திச் செல்லும். அப்படி ஒரு வியப்பான படைப்பா... மேலும் பார்க்க

``போட்டித் தேர்வா? இளைஞர்களுக்கு உதவ நாங்க ரெடி" - சொல்லும் பஞ்சாப் கிராமம்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தது அக்ரி கிராமம். இந்தக் கிராமத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமா இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்கவும், மேலும், இளைஞர்கள் இந்த வலையில் சிக்காமல் இ... மேலும் பார்க்க

``ஆரம்பத்துல விக்கவே கஷ்டப்பட்டோம்... இப்போ நிலைமையே வேற..." - கலக்கும் சிற்பக்குழு பெண்கள்

கார்த்திகை தீபத் திருநாளின் அழகே மண் விளக்கிலும், அதன் ஒளியிலும் தான். அந்த விளக்கை அற்புதமாக வடிவமைத்து, விற்று வருகின்றனர் விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் உள்ள கலைமகள் சுடுமண் சிற்பக் க... மேலும் பார்க்க