செய்திகள் :

``போட்டித் தேர்வா? இளைஞர்களுக்கு உதவ நாங்க ரெடி" - சொல்லும் பஞ்சாப் கிராமம்

post image
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தது அக்ரி கிராமம். இந்தக் கிராமத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமா இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தடுக்கவும், மேலும், இளைஞர்கள் இந்த வலையில் சிக்காமல் இருக்கவும் இந்தக் கிராமம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

தேர்தல் முடிந்து கடந்த ஞாயிற்று கிழமை, இந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துக் கூட்டம் கூடியுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளாவது...

அக்ரி கிராமத்தின் கஜானாவில் கோடிக்கணக்கில் தொகுதி நிதி உள்ளது. இதைப் பயன்படுத்தி மத்திய மற்றும் பஞ்சாப் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத நினைக்கும் இளைஞர்களுக்கு சாதி, மதம், இனம் பேதமில்லாமல் உதவ உள்ளது.

மேல் படிப்பு டு போட்டி தேர்வு

இந்தக் கிராமத்தைப் போதை இல்லாத கிராமமாகவும் மாற்ற உள்ளது மற்றும் விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுக்குறித்து அந்தக் கிராமத்தினர் பேசும்போது, "தகுதியான பல இளைஞர்களால் உயர் கல்வி படிக்க முடியாமலும், மத்திய, மாநில போட்டித் தேர்வுகளை எழுத முடியாமலும் இருக்கிறது. அதனால், இவர்களுக்கு உதவத்தான் இந்த முடிவை கிராமப் பஞ்சாயத்து எடுத்துள்ளது.

இவர்களுக்குக் கொடுக்கும் பணமானது கடன் அல்ல... முதலீடு. அவர்கள் வெற்றி பெற்றப்பின் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிற இளைஞர்களுக்கு உதவுவார்கள்.

போதை பொருட்களையும், அதை விற்பவர்களையும் தடை செய்யப்போகிறோம். நன்றாகப் படிக்கும் பெண்கள் கோச்சிங் சென்டர்கள் செல்ல பொருளாதாரம் மற்றும் பிற காரணங்களால் தயங்குகின்றனர். ஆனால், இந்தத் தயக்கத்தை புதிய சட்டம் உடைக்கும்" என்று கூறுகின்றனர்.

``ஆரம்பத்துல விக்கவே கஷ்டப்பட்டோம்... இப்போ நிலைமையே வேற..." - கலக்கும் சிற்பக்குழு பெண்கள்

கார்த்திகை தீபத் திருநாளின் அழகே மண் விளக்கிலும், அதன் ஒளியிலும் தான். அந்த விளக்கை அற்புதமாக வடிவமைத்து, விற்று வருகின்றனர் விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் உள்ள கலைமகள் சுடுமண் சிற்பக் க... மேலும் பார்க்க

Cryptic Pregnancy: `15 மாத கர்ப்பம்... கையில் குழந்தை' - பணம் பறிக்கும் மோசடி கும்பல்; உஷார் மக்களே!

``இது என்னுடைய குழந்தை தான்... நான் 15 மாதம் சுமந்து பெற்ற குழந்தை'' என்று விசாரணையில் ஒரு பெண் அடம்பிடிக்க... அடித்துக்கூற ஆடிப்போயிருக்கிறார்கள் அதிகாரிகள். இது நடந்தது இந்தியாவில் அல்ல, நைஜீரியாவில... மேலும் பார்க்க

கவனம்: 'ஆபீஸ் மீட்டிங்கிற்கு லேட்டாக செல்வீர்களா?!' - வெளிநாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஸ்கூல், காலேஜ் அல்லது ஆபீஸுக்கு ஒருநாளாவது லேட்டாக செல்லாத ஆட்கள் மிக மிக குறைவு. இன்னும் சிலர், ஆபீஸாக இருந்தாலும் சரி, மீட்டிங்காக இருந்தாலும் சரி லேட்டாக செல்வதை தங்களது வழக்கமாகக் கூட வைத்திருப்பா... மேலும் பார்க்க