செய்திகள் :

கவனம்: 'ஆபீஸ் மீட்டிங்கிற்கு லேட்டாக செல்வீர்களா?!' - வெளிநாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

post image

ஸ்கூல், காலேஜ் அல்லது ஆபீஸுக்கு ஒருநாளாவது லேட்டாக செல்லாத ஆட்கள் மிக மிக குறைவு. இன்னும் சிலர், ஆபீஸாக இருந்தாலும் சரி, மீட்டிங்காக இருந்தாலும் சரி லேட்டாக செல்வதை தங்களது வழக்கமாகக் கூட வைத்திருப்பார்கள். அதனால், 'லேட்' என்பது பலரின் வாழ்க்கையில் சகஜமான ஒன்று. ஆனால், ஒரே ஒரு நாள் மீட்டிங்கை தவறவிட்டதற்கு ஒரு நிறுவனம் தனது ஊழியர்கள் 99 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது.

வெளிநாட்டை சேர்ந்த இசைக்கருவிகள் விற்கும் ஆன்லைன் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கடந்த 15-ம் தேதி, காலை 8.30 மணிக்கு மீட்டிங் ஒன்றை வைத்துள்ளது.

ஆன்லைன் ஸ்டோர்

அந்த மீட்டிங்கிற்கு நிறுவனத்தின் ஊழியர்கள் 99 பேர் லேட்டாக வந்துள்ளனர். இதனால், அந்த 99 பேரையும் வேலையை விட்டு தூக்கியுள்ளார் நிறுவனர். அந்த நிறுவனத்தில் மொத்தமாக 110 பேர் தான் பணிபுரிந்து வந்தனர் என்பது தான் இந்த சம்பவத்தின் ஹைலைட்.

தாமதமாக சென்ற ஊழியர்களுக்கு, "இன்று மீட்டிங் வராதவர்கள் இந்த மெயிலை நீங்கள் நீக்கப்பட்டதற்கு அபிசியல் லெட்டராக எடுத்துகொள்ளுங்கள். நீங்கள் ஒப்பந்தத்தில் என்ன செய்வீர்கள் என்று ஒப்புகொண்டுள்ளீர்களோ, அதை நிறைவேற்ற தவறவிட்டு விட்டீர்கள். உங்கள் வேலை நிமித்தமாக பங்குபெற வேண்டிய மீட்டிங்கை தவறவிட்டு விட்டீர்கள். கம்பெனியின் பொருள் எதாவது உங்களிடம் இருந்தால் அதை திருப்பி தந்துவிடுங்கள்" என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆட்சனிடமிருந்து மெயில் வரவே, ஊழியர்களுக்கு தாங்கள் பணியில் இருந்து நீக்கப்பட்ட தகவல் தெரிந்திருக்கிறது.

நீக்கப்பட்ட தகவல்...

ஆனால், இந்த ஊழியர்கள் அனைவரும் சம்பளம் இல்லாமல் பயிற்சிக்காக மட்டும் பணிபுரிபவர்கள் ஆவர். கிட்டத்தட்ட அப்ரண்டிஸ் என்று எடுத்துகொள்ளலாம். இவர்கள் இ-காமர்ஸ் பற்றி அறிவை வளர்த்துகொள்வதற்காகத் தான் இந்த பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

"இவர்கள் யாருக்கும் சம்பளம் இல்லை என்பதால் அவர்கள் இஷ்டத்திற்கு பணிக்கு வந்தார்கள். அது தான் நிறுவனரின் கோபத்திற்கு காரணம்" என்று ஊழியர் ஒருவர் பிரபல சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Cryptic Pregnancy: `15 மாத கர்ப்பம்... கையில் குழந்தை' - பணம் பறிக்கும் மோசடி கும்பல்; உஷார் மக்களே!

``இது என்னுடைய குழந்தை தான்... நான் 15 மாதம் சுமந்து பெற்ற குழந்தை'' என்று விசாரணையில் ஒரு பெண் அடம்பிடிக்க... அடித்துக்கூற ஆடிப்போயிருக்கிறார்கள் அதிகாரிகள். இது நடந்தது இந்தியாவில் அல்ல, நைஜீரியாவில... மேலும் பார்க்க