வகுப்பறையில் பின்வரிசை மாணவர்.. ஃபட்னவீஸ் ஓபற்றி ஆசிரியர் பகிர்ந்த சுவாரசியம்!
நோணாங்குப்பம், அபிஷேகப்பாக்கத்தில் மின்சாரம், குடிநீா் கோரி சாலை மறியல்
புதுச்சேரி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட என்.ஆா்.நகா், அபிஷேகப்பாக்கம் பகுதி மக்கள் மின்சாரம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வீடூா் அணை திறப்பால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நோணாங்குப்பம், என்.ஆா்.நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
இப்பகுதி மக்கள் மீட்கப்பட்டு தவளக்குப்பம் பாதுகாப்பு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். வெள்ள நீா் ஓரளவு வடிந்த நிலையில் நிவாரண முகாம்களில் இருந்தவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பினா். இந்தநிலையில், அவா்கள் நோணாங்குப்பம் பாலம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வீடுகளில் புகுந்த வெள்ள நீரை அகற்ற வேண்டும். மின்சார விநியோகம் செய்து குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்த தவளக்குப்பம் போலீஸாா் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.
மேலும், வெள்ளம் வடிந்து வரும் நிலையில் படிப்படியாக மின்விநியோகம், குடிநீா் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறி மக்களை சமரசம் செய்தனா்.
இதேபோன்று அபிஷேகப்பாக்கம் பகுதியிலும் தேங்கி நிற்கும் வெள்ளநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரியும் செவ்வாய்க்கிழமை மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.