நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
கீர்த்தி சுரேஷ் திருமண தேதி!
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில நாள்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் தன் காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “15 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். எப்போதும் தொடரும்” என தெரிவித்ததுடன் காதலர் ஆண்டனிதான் என்பதையும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: தனுஷின் அடுத்தடுத்த வெளியீடுகள்!
இவர்களின் திருமணம் கோவாவில் டிசம்பர் மாதம் நிகழும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் - ஆண்டனியின் திருமணம் டிச. 12 ஆம் தேதி கோவாவில் நடைபெறுவதாகக் குறிப்பிடும் திருமண அழைப்பிதழை பிஆர்ஓ-க்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: நாக சைதன்யா - சோபிதா துலிபாலா முகூர்த்த நேரம் அறிவிப்பு!