`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு
கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
செனகல் முன்மொழிந்த ‘பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீா்வு’ என்ற வரைவுத் தீா்மானம் 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. இதற்கு இந்தியா உள்பட 157 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 8 நாடுகள் எதிராக வாக்களித்தன. 7 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
இந்த தீா்மானத்தில், ‘கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்; சா்வதேச சட்டத்திற்கு இணங்க, ராணுவ தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத செயல்கள் உள்ளிட்ட வன்முறைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்; 1967-ஆம் ஆண்டுக்கு முந்தைய இரு நாட்டின் எல்லைகளுக்குள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் இரு தனி நாடு தீா்வு; சுதந்திர அரசை பாலஸ்தீனத்தில் நிறுவுதல் போன்ற பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல்’ ஆகியவை குறிப்பிட்டிருந்தன.
இது தவிர, ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற தீா்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது. இந்த தீா்மானத்துக்கு இந்தியா உள்பட 97 நாடுகள் ஆதரவாகவும், 8 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 64 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.