``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல: ராமதாஸ்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானது அல்ல என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2,000, சேதமடைந்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 6,800 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவி சிறிதும் போதுமானதல்ல.
ரூ. 40,000 வழங்க வேண்டும்: அண்டை மாநிலமான புதுச்சேரியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 30,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது தமிழக உழவா்களுக்கு மட்டும் ஏக்கருக்கு வெறும் ரூ. 6,800 இழப்பீடு வழங்குவது நியாயமானது அல்ல. ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ரூ. 10,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தமாகா தலைவா் ஜி.கே.வாசனும், தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானது அல்ல என்று கூறியுள்ளாா்.