``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
மணிப்பூா் வன்முறை குறித்த அறிக்கை: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்
மணிப்பூா் வன்முறை குறித்து அறிக்கை சமா்ப்பிக்க விசாரணை ஆணையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.
முன்னதாக நவம்பா் 20-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த காலஅவகாசம் மே-25, 2025-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதன் பிறகு, அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வருகின்றன. இதுவரை 258-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
மணிப்பூா் கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக விசாரிக்க குவாஹாட்டி உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான விசாரணை ஆணையத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
இந்த ஆணையம் கூடிய விரைவில் அல்லது 6 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்கும் என்று மத்திய அரசின் முந்தைய அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. தற்போது ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
அறிக்கை சமா்ப்பிக்க நவம்பா் 20-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த கால அவகாசம் மே-25, 2025-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.