அவள் மழை! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
வானில் மேகங்களில் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்த இவள், கொஞ்சம் கொஞ்சமாக பூமியை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தாள்.. பூமியில் இருந்து மேலே ஏற்றப்பட்டவள் தான் இவள்.. மீண்டும் பூமிக்கு வருகிறாள். இவள் வரப் போகிறாள் என ஏற்கனவே பூமிக்குத் தெரியும்.
வரட்டும் பாத்துக்கலாம் என சிலர், இவள் வந்தால் தொந்தரவாயிற்றே என சிலர், இவளை ரசிக்க ஒரு கூட்டம், இவளை வெறுக்க ஒரு கூட்டம் .. என இவளை வரவேற்பதில் கலவையான எமோஷன்ஸ் இருக்கத் தான் செய்கிறது.
சரி , மேலே இருந்து இறங்கியாயிற்று , ஒரு ரவுண்ட் எல்லா இடங்களையும் பார்த்து விட எண்ணி, இவள் ஒவ்வொரு இடமாக போக ஆரம்பித்தாள்.
முதலில் சாலைகளில் சென்றாள்... பிரதான சாலைகள் இவளை வரவேற்றன. அவற்றின் மீது நடந்தபடியே, ஊருக்குள் சென்று, வீடுகளுக்குள்ளும் செல்லலாம் என இவளுக்கு ஆசை வந்தது.
வளைந்து நெளிந்து ஓர் ஓடையின் உருவம் பெற்று, இவள் நடந்து சென்றாள். சில இடங்களுக்குள் இவளால் சுலபமாக செல்ல முடிந்தது. சென்று பார்த்தாள்.. இரண்டு நாள் அங்கேயே டென்ட் போட்டுத் தங்க நினைத்தாள்.
ஒரு சில இடங்களில் இவளுக்கு நோ என்ட்ரீ பலகையை காண்பித்தார்கள்.. கோடையில் என்னைக் கூப்பிடுவீர்கள்.. அப்போ நானும் நோ என்ட்ரீ பலகையை உனக்குத் திரும்பத் தருகிறேன் என்றபடி அந்த இடத்தைவிட்டு வேறு இடம் நோக்கி நகர்ந்தாள்.
ஒரு சிலரின் வீடுகளில் உள்ளே செல்லும் வாய்ப்புக் கிட்டியது இவளுக்கு. சமையலறை வரைகூட அனுமதித்தார்கள்.. ஆனால் என்ன?? இவளையே காரணம் காட்டி ஒரு சிலர் சமைக்காமல் இருந்தார்கள்.. பலர், தங்களால் முடிந்ததை சமைத்து இவளுக்கு சமையலின் வாசத்தை அறிமுகம் செய்தார்கள்.
எல்லாவற்றையும் நோட்டமிட்ட படியே இவள் சென்று கொண்டேயிருக்கிறாள். எங்கும் நிற்க மனமில்லை. இரண்டு நாட்களோ, மூன்று நாட்களோ தான் இவள் பயணம் இங்கே..கல்யாணத்திற்கு வந்து செல்லும் விருந்தினர் போல்..., நடக்கும் எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் இந்நாட்களில் இவளுக்கு...
ஒரு சில இடங்களில் இவள் வரவால் சிரமம் அதிகமாகிப் போனது சிலருக்கு.
நீ வந்த நேரம்..கரன்ட் இல்ல, குடிக்க தண்ணீ இல்ல, பால் இல்ல, பிஸ்கட் இல்ல..எதுக்குதான் வந்தியோ என இவளை கரித்துக் கொட்டியதைப் பார்த்தாள்..
சிலர் கொண்டாடியதைப் பார்த்தாள்.. இவளைப் பார்த்துக் கொண்டே, சூடாக பஜ்ஜியும் , போண்டாவும் செய்து சாப்பிடும் முன் , அதை படம் பிடித்து கைபேசியில் போட்டு, மழை டா.. குளிர் டா.. பஜ்ஜி டா..என சைடில் கவிதைகள் எழுதிய நெட்டிசன்களையும் ரசித்தாள்,...
பெரிய வீடு கட்டி திருப்தியுடன் வாழ்ந்தவர்கள் கூட, இவளின் வரவால், முகாம்களுக்குள் அடைக்கலம் ஆனதை இவள் பார்த்தாள்..
இரவு எனப் பாராமலும் தெருக்களை சுத்தப்படுத்தும் ஆட்களைப் பார்க்கையில், இவளுக்குக் கொஞ்சம் மனம் இறங்கியது. பேசாம கடலுக்கே போயிடலாமா?? என..
தனித்தனி தீவுகளாக மாறிய சில இடங்களில் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் துரித வேலைகளுக்கு ஒரு சல்யூட் அடித்தாள் இவள்..
இன்னமும் இரண்டு நாட்கள் இருந்து ஊருக்குள் வலம் வர ஆசைப்பட்டாள் இவள். ஆனால் முதல் நாள் வரவேற்பு , மூன்றாம் நாளில் கிடைக்காது எனத் தெரியும் இவளுக்கு.. அதனால் வேறொரு ஊரில் , வேறோரு இடத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டு அங்கு தன் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டாள்..
இவளை யார் முழு மனதோடு ஆதரிப்பார்களோ என இவளுக்குத் தெரியாது.. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டும் இவளை எப்போதும் குதூகலமாக வரவேற்கிறார்கள் என இவள் புரிந்து கொண்டாள்..
அடிக்கடி அவர்களுக்காகவாவது.,.வரவேண்டும் .. என இவள் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள்..
என்றும் அன்புடன் மழை...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...