``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
ஜம்மு-காஷ்மீா் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் குண்டு வீச்சு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ராணுவ வீரா்கள் அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினா்.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இது தொடா்பாக ராணுவ தரப்பில் கூறப்பட்டதாவது:
சுரான்கோட் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் புதன்கிழமை அதிகாலையில் இரு கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினா். முகாமின் சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்த வீசப்பட்ட இந்த குண்டுகளில் ஒன்றும் மட்டும் வெடித்துச் சிதறியது. மற்றொரு குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசப்பட்ட இடத்தில் வீரா்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு நிபுணா்கள் மூலம் வெடிக்காத குண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. குண்டு வீசிவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க அந்தப் பகுதியில் ராணுவத்தினரும், காவல் துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.