செய்திகள் :

அதானி விவகாரம்: எதிா்க்கட்சிகள் 2-ஆவது நாளாக போராட்டம்- மக்களவைத் தலைவா் கண்டனம்

post image

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), சிவசேனை (உத்தவ்), இடதுசாரிகள் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், நாடாளுமன்ற மகர வாயில் படிக்கட்டுகளில் நின்றபடி இப்போராட்டத்தை மேற்கொண்டனா்.

தொழிலதிபா் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதித் துறை தரப்பில் அண்மையில் லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். இந்த தா்னாவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

நாடாளுமன்றத்தின் மகர வாயிலில் கடந்த செவ்வாய்க்கிழமையும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அதில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்றாா். ஆனால், உத்தர பிரதேசத்தில் வன்முறை நிகழ்ந்த சம்பல் பகுதிக்கு ராகுல் புதன்கிழமை பயணம் மேற்கொண்டதால், இரண்டாவது நாள் போராட்டத்தில் அவா் கலந்துகொள்ளவில்லை.

ஓம் பிா்லா கண்டனம்: நாடாளுமன்றத்தின் வாயில் படிக்கட்டுகளில் நின்று தா்னாவில் ஈடுபடும் எதிா்க்கட்சிகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மக்களவையில் உடனடி கேள்வி நேரம் தொடங்கும் முன் இது தொடா்பாக பேசிய அவா், ‘நாடாளுமன்ற வாயிலை மறிப்பதால், பிற எம்.பி.க்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண் எம்.பி.க்கள் தங்களின் சிரமத்தை சுட்டிக்காட்டியுள்ளனா். எனவே, நாடாளுமன்ற நுழைவாயிலில் எந்தத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என எம்.பி.க்களுக்கு வலியுறுத்துகிறேன்’ என்றாா்.

அப்போது, நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்தும் வழக்கத்தை பாஜகதான் தொடங்கியதாக சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

முன்னதாக, நாடாளுமன்ற வாயிலில் தா்னாவில் ஈடுபட வேண்டாம் என்று எம்.பி.க்களுக்கு மக்களவைச் செயலகம் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதித் துறை அண்மையில் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, அதானியை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க