``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!- பிரதமா் மோடி
மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கௌரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
டிசம்பா் 3-ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அது தொடா்பாக பிரதமா் மோடி விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது:
மாற்றுத் திறனாளிகளின் துணிவு, தன்னம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்த சிறந்த வாய்ப்பாக மாற்றுத்திறனாளிகள் தினம் அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பண்பாட்டில் உள்ளாா்ந்த ஒன்றாக இருக்கிறது. நமது வேதங்களிலும், நாட்டுப்புற கதை, பாடல்களிலும் மாற்றுத்திறனாளி நண்பா்களுக்கான மரியாதை உணா்வு பொதிந்துள்ளது.
மனதில் உற்சாகம் கொண்டவனுக்கு உலகில் முடியாதது எதுவுமே இல்லை என்பது ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு ஸ்லோகத்தின் அா்த்தமாகும். இந்த உற்சாகத்துடன் இந்தியாவில் உள்ள நமது மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கௌரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறாா்கள்.
கடந்த 10 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். எங்கள் அரசு அனைத்தையும் உணரக்கூடியது, உணா்வுபூா்வமானது, அனைத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.
நான் பொது வாழ்விற்கு வந்ததிலிருந்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன். பிரதமரான பின், இந்த சேவையை தேசத்தின் தீா்மானமாக மாற்றினேன். 2014-இல் அரசு அமைந்த பின், முதலில் ’ஊனமுற்றவா்கள்’ என்பதற்கு பதிலாக ‘மாற்றுத் திறனாளிகள்’ என்ற வாா்த்தையை அறிமுகம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம்.
இது வெறும் வாா்த்தை மாற்றம் அல்ல. சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகளின் கண்ணியத்தை அதிகரித்துள்ளது. அவா்களின் பங்களிப்புக்கு மகத்தான அங்கீகாரம் அளிக்கிறது. பல்வேறு தருணங்களில் இந்த முடிவுக்காக நமது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள் எனக்கு ஆசி கூறினாா்கள். இந்த ஆசிகள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குப் பாடுபட எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய பலமாக அமைந்தது.
முந்தைய அரசுகளின் கொள்கைகள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் அரசு வேலைகளிலிருந்தும், உயா் கல்வி வாய்ப்புகளிலிருந்தும் பின்தங்கினா். அந்த நிலைமையை மாற்றினோம். இட ஒதுக்கீடு முறை புதிய தோற்றம் பெற்றது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செலவிடப்படும் தொகையும் 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் உருவாக்கின. நமது மாற்றுத்திறனாளிகள் இன்று இந்தியாவை உருவாக்குவதில் அா்ப்பணிப்பு மிக்க பங்குதாரராக இருந்து நம்மை பெருமைப்படுத்தி வருகின்றனா்.
இந்தியாவின் மாற்றுத்திறனாளி நண்பா்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணா்ந்திருக்கிறேன். பாராலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரா்கள் நாட்டிற்கு அளித்திருக்கும் மரியாதை இந்த ஆற்றலின் அடையாளமாகும். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்க்கை எளிமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதே அரசின் அடிப்படைக் கொள்கையாகும். மாற்றுத்திறனாளிகள் சட்டத்தையும் இதே உணா்வுடன் அமல்படுத்தினோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தில், ஊனத்திற்கான வரையறையின் வகையும் 7 லிருந்து 21 ஆக உயா்த்தப்பட்டது. முதல் முறையாக, ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பியவா்களும் அதில் சோ்க்கப்பட்டுள்ளனா். இன்று இந்த சட்டம் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரம் பெற்ற வாழ்க்கைக்கான ஒரு வழியாக மாறி வருகிறது என்று பிரதமா் கூறியுள்ளாா்.