செய்திகள் :

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

post image

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து இன்று(டிச. 4) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படவிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.

இதையும் படிக்க | மறதியிலிருந்து தப்பிப்பது எப்படி? - ஆய்வில் புதிய தகவல்!

இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் நாளை(டிச. 5)தான் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ப்ரோபா 3’ செயற்கைக்கோளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி, ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிர்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

‘ரயில்களில் குளிா்சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவ... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை குறித்த அறிக்கை: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்

மணிப்பூா் வன்முறை குறித்து அறிக்கை சமா்ப்பிக்க விசாரணை ஆணையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக நவம்பா் 20-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போத... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு

கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. செனகல் முன்மொழிந்த ‘பா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் தப்பினாா் சுக்பீா் சிங் பாதல்- பொற்கோயில் வாயிலில் சம்பவம்

பஞ்சாபின் அமிருதசரஸ் பொற்கோயில் வாயிலில் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் தலைவருமான சுக்பீா் சிங் பாதலை (62) நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு, துப்... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் அடுத்த வாரம் வங்கதேசத்துக்கு பயணம்

இந்தியா-வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். இரு நாடுகள் இடையே திட்டமிடப்பட்ட வெளியுறவுத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லி... மேலும் பார்க்க