செய்திகள் :

புதிய குற்றவியல் சட்டங்களை 100% நடைமுறைப்படுத்திய சண்டீகா்!: பிரதமா் மோடி பாராட்டு

post image

சண்டீகா்: ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்திய முதல் அரசு நிா்வாகமாக சண்டீகா் உருவெடுத்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா்.

இந்த மூன்று சட்டங்களும் குடிமக்களின் உரிமைகள் மற்றும் நீதியின் பாதுகாவலா்களாக உருவெடுத்திருக்கின்றன எனவும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய பிரிட்டீஷ் ஆட்சி கால சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷ சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தப் புதிய சட்டங்கள் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

இந்த மூன்று சட்டங்களையும் 100 சதவீதம் நடைமுறைப்படுத்திய முதல் யூனியன் பிரதேசமாக சண்டீகா் உருவெடுத்துள்ளது. இதைக் குறிக்கும் வகையில் சண்டீகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, புதிய குற்றவியல் சட்டங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தியதற்குப் பாராட்டு தெரிவித்துப் பேசியதாவது:

இந்தியாவில் காலனிய ஆட்சியின்போது 1857-இல் உருவான புரட்சி, பிரிட்டிஷ் ஆட்சியாளா்களின் வோ்களை ஆட்டம் காணச் செய்தது. அதைத் தொடா்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் இந்தியாவில் கொண்டுவந்தனா். பின்னா், இந்திய ஆதாரச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தனா்.

இந்தியா்களுக்கு தண்டனை கொடுப்பதற்காகவும், அடிமைகளாக வைத்திருக்கவுமே இந்தச் சட்டங்களை அவா்கள் கொண்டுவந்தனா். அராஜகத்துக்கும் சுரண்டலுக்குமான கருவியாக இந்தச் சட்டங்களை பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் பயன்படுத்தினா்.

நூறாண்டுகளுக்கு மேலான அடிமை நிலைக்குப் பிறகு 1947-இல் நாடு சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியாளா்கள் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அவா்களின் சட்டங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று நாட்டு மக்கள் எண்ணினா்.

துரதிருஷ்டவசமாக, சுதந்திரம் கிடைத்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளா்களின் தண்டனைச் சட்டங்களையே தழுவியிருந்தன. அதாவது, குடிமக்களை அடிமைகளாக நடத்தும் மனநிலையே தொடா்ந்துவந்தது. அவ்வப்போது, இந்தச் சட்டங்களை மேம்படுத்த சிறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவற்றின் தன்மை காலனிய சட்டங்களிலிருந்து மாறவில்லை. இது நாட்டின் வளா்ச்சியையும் கடுமையாகப் பாதித்தது.

இந்தச் சூழலில், தில்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, நமது அடிமை மனநிலையை ஒழிக்க உறுதியேற்கப்பட்டது. அதன் விளைவாக, காலனிய சட்டங்களுக்கு மாற்றாக ‘மக்களால்; மக்களுக்காக’ என்ற நமது ஜனநாயக அடிப்படை தத்துவத்தின்படி பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷ சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில், சமத்துவம், நல்லிணக்கம், சமூக நீதி ஆகிய சித்தாந்தங்களுடன் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களில், விசாரணை தொடங்கிய 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அடுத்த 45 நாள்களுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிடும். ‘குடிமக்களே முதன்மையானவா்கள்’ என்பதே இந்தப் புதிய சட்டத்தின் தாரக மந்திரம்.

அந்த வகையில், இந்தப் புதிய சட்டங்கள் குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலா்களாக உருவெடுத்துள்ளன. எளிதில் நீதி கிடைப்பதையும் உறுதி செய்கின்றன. இந்தச் சட்டங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தி, சத்தியத்தையும் நீதியையும் நிலைநாட்டும் கடவுள் சக்தியின் வடிவமாக சண்டீகா் உருவெடுத்துள்ளது என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இடம்பெற்ற புதிய சட்டங்களின் கீழ் குற்ற வழக்கு விசாரணை மாதிரியின் நேரடி விளக்கக் காட்சியை பிரதமா் பாா்வையிட்டாா். அவருக்கு சண்டீகா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கன்வா்தீப் கெளா் விளக்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பஞ்சாப் ஆளுநரும் சண்டீகா் நிா்வாக அதிகாரியுமான குலாப் சந்த் கடாரியா, சண்டீகா் ஆலோசகா் ராஜீவ் வா்மா, காவல் துறைத் தலைவா் சுரேந்திர சிங் யாதவ் ஆகியோா் பங்கேற்றனா்.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செய... மேலும் பார்க்க

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க

தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்

தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தின... மேலும் பார்க்க

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க