சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!
நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.
மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து முதல்வர் பதவியை ஃபட்னவீஸிடமிருந்து பறித்தபோது இதைத்தான் கூறிக்கொண்டிருந்தார்.
பிறகு, 2022ஆம் ஆண்டு மகாயுதி கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், ஃபட்னவீஸ் துணை முதல்வர் பதவிக்கு இறக்கப்பட்டார்.
இதனால், உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சியினரால், ஃபட்னவீஸ் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். அரசியல் சக்கரவீயூகத்தால் வீழ்த்தப்பட்டர் என்றும் கூறப்பட்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே தேர்தல் பிரசாரத்தின்போது, தேவேந்திர ஃபட்னவீஸ் தனியாக என்ன செய்துவிட முடியும் என்று கேட்டிருந்தார். அதற்கேற்றார் போலவே, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி தோல்வியடைந்தது. ஃபட்னவீஸ் தலைமையில் பாஜக சந்தித்த மிகப்பெரியதோல்வியாகவும் பார்க்கப்பட்டது.
தொடர்ச்சியாக சரிவைக் கண்டுவந்த பலரும், அரசியலில் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆட்டம் முடிந்துவிட்டதாகவேக் கருதினர். பாஜகவுக்குள்ளே இருந்த ஃபட்னவீஸ் போட்டியாளர்களும் கூட அப்படித்தான் நம்பியிருந்தனர்.
ஆனால், எல்லாவற்றையும் தாண்டி மகத்தான வெற்றி என்பதைப் பதிவு செய்து நான் ஒரு அபிமன்யு என்பதை நிரூபித்திருக்கிறார் 2024 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம். நடந்து முடிந்த தேர்தலில், பாஜக இதுவரை காணாத ஒரு வெற்றியை அதாவது 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், தற்போது மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கும் அவர் தேர்வாகியிருக்கிறார்.
சக்ரவியூகத்தை உடைத்து எவ்வாறு வெற்றி பெறவேண்டும் என்பதை நன்கு அறிந்த நான்தான் நவீன அபிமன்யு என்று தேர்தல் பிரசாரங்களின்போது ஃபட்னவீஸ் கூறியிருந்தார். அதனை மெய்ப்பித்துவிட்டார்.
மகாராஷ்டிரத்தில் கோலோச்சி வந்த சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்து, தலா ஒரு கட்சியை தன்னுடன் இணைத்து, கடந்த 30 மாதங்களில் பாஜக செய்த அரசியல் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
பலரும், உள்கட்சிப் பூசல், குடும்பப் பகை, பிள்ளைகளுக்குப் பதவி என பல காரணங்களால் தான் இந்தக் கட்சிகள் உடைந்ததாகக் கூறி வந்தாலும், இதற்கெல்லாம் மூலக்காரணமாக முக்கிய கட்சி இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.