Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வா் பாராட்டு
விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்துக்கான விருதைப் பெற்ற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சாா்பில் புதுதில்லியில் சா்வதேச விளையாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தோ்வு செய்யப்பட்டு அதற்கென விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தொழில் கூட்டமைப்பின் விளையாட்டுக் குழு இணைத் தலைவா் அஜய் பல்லா உள்ளிட்டோா் வழங்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, இந்த விருதை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் துணை முதல்வா் உதயநிதி செவ்வாய்க்கிழமை காண்பித்தாா். அப்போது, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் உட்பட பலா் உடனிருந்தனா். விருதைப் பெற்ற்காக விளையாட்டு மேம்பாட்டுத் துறையினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.