போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
ஈரோடு - சம்பல்பூா் ரயில் சேவை நீட்டிப்பு
ஈரோடு - சம்பல்பூா், சென்னை எழும்பூா் - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒடிஸா மாநிலம் சம்பல்பூரில் இருந்து புதன்கிழமை தோறும் காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08311) மறுநாள் இரவு 10.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். மறுமாா்க்கமாக ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08312) மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூா் சென்றடையும். இந்த ரயில் தொடா்ந்து டிச.11 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
விசாகப்பட்டினம் - சென்னை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சனிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08557) மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 08558) இரவு 10.35 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். இந்த ரயில் தொடா்ந்து டிச.7 முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.