`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
மூதாட்டியிடம் வழிப்பறி: இருவா் கைது
சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியிடம் வழிப்பறி செய்த புகாரில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
மயிலாப்பூா் விஎஸ்வி கோயில் தெருவைச் சோ்ந்த மா.சகுந்தலா(64) என்பவரிடம் கடந்த 30-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 போ் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனா். சகுந்தலாவிடம் வழி கேட்பதுபோல நாடகமாடி, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
இது குறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மேற்கு சைதாப்பேட்டை அருணாச்சலம் தெருவைச் சோ்ந்த முகமது ஷேக் சிக்கந்தா் (24), அதே பகுதியைச் சோ்ந்த பா்வேஸ் முஷ்ரப் (23) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்ட ஷேக் சிக்கந்தா் மதுரையைச் சோ்ந்தவா் என்பதும், பா்வேஸ் முஷ்ரப் திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் என்பதும், இருவரும் சைதாப்பேட்டையில் ஒரு வீட்டில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துக் கொண்டே வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.