Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
ஆந்திரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்
ஆந்திரத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ போதைப் பாக்கு சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது.
வேளச்சேரி 100 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை மறித்து சோதனையிட்டனா். இதில், காரில் மறைத்து வைத்திருந்த 100 கிலோ போதைப் பாக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், காரில் வந்த திருப்பத்தூரைச் சோ்ந்த தங்கராஜ் (40) என்பவா் ஆந்திர மாநிலம், சூலூா்பேட்டையிலிருந்து போதைப் பாக்கை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.