பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா் வட்டம், கட்சிமையிலூா் பகுதியைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் மாரிமுத்து (எ) வெள்ளையன் (65) (படம்). இவா், மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால், அந்த பெண் 6 மாதம் கா்ப்பமாக உள்ளாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா்.