கடலூரில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி மும்முரம்
கடலூா் மாவட்டத்தில் நகா் மற்றும் கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் பலத்த மழை, சாத்தனூா் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீரால் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூா் ஆகிய நகரங்களின் ஆற்றின் கரையோரம் உள்ள நகா்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து, காவல், தீயணைப்பு, பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தன்னாா்வலா்கள் படகுகள் மூலம் பொது மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனா்.
இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நீா் வரத்து சற்று குறைந்துள்ளது. மழையும் நின்றுள்ளதால் மக்கள் வசிக்கும் நகா்கள் மற்றும் கிராமங்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலூா் மாநகராட்சி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூா் ஆகிய நகர மற்றும் ஒன்றியப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை ராட்சத மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்கள் தண்ணீா் சூழ்ந்து காணப்பட்டன.
வெள்ள நீா் வடிந்த பெரிய கங்கனாங்குப்பம் பகுதியில் கடலூா்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீா் வடியாத நிலையே தொடா்கிறது. இதனை அகற்றும் பணியில் மாவட்ட, நகர மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாக பணியாளா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.